பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

liquor amni

646

Littritis


liquor amni : பனிக்குட நீர் : பனிக்குடத் திரவம்.

lithiasis : கல்லடைப்பு; கல்லுருப் பெறல்; கடினமாதல்; கல் நோய்; கல் அடர்வு : உடலின் உள்ளுறுப்புகளில் கல்போன்ற தடிப்பு.

lithium carbonate : லித்தியம் கார்பனேட் : மனச்சோர்வு நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருள். இதைக் கொடுப்பதற்கு முன்பு குருதி ஊனிர் அளவு, அகடயச் சுரப்பி இயக்கம் ஆகியவற்றைக் கண்டுகொள்ள வேண்டும். இதனால் வயிற்றுப் போக்கு, வாந்தி, அரைத்துக்க நிலை ஏற்படலாம்.

litholapaxy : சிறுநீர்க்கல் நீக்க மருத்துவம்; கல் கரைத்தெடுத்தல் : சிறுநீர்ப்பையிலுள்ள ஒரு கல்லை உடைத்து அதன் துகள்களை நீர்த்தாரை மூலம் அகற்றுதல்.

lithopaedion : இறந்த கருமுனை; கல் பிண்டம் : கருப்பையில் தங் கியுள்ள ஒரு இறந்த கரு முனை. இரட்டைகளில் ஒன்று இறந்துபோய் சில சமயங்கள் சுண்ணாம்பு உப்புகளினால் செறிவுற்றுப் பதனமாகி விடுதல்.

Lithophyt : கற்கள் உடைக்கும் மருந்து : குண்டிக்காயிலுள்ள கற்களை உடைக்கும் மருந்து.

lithotomy : குண்டிக்காய் அறுவை மருத்துவம்; கல்வெட்டு; கல் அகற்றல் : குண்டிக்காயில் உள்ள கற்களை நீக்கும் அறுவை முறை.

lithotrite : சிறுநீர்ப்பைக் கல் உடைப்புக் கருவி; சிறுநீர்ப்பை கல் நொறுக்கி : சிறுநீர்ப்பையிலுள்ள ஒரு கல்லை உடைக்கும் கருவி.

lithotrity : குண்டிக்காய் கல் உடைப்பு : இயல்பாக வெளிவரும் வகையில் குண்டிக்காய்க் கற்களைப் பொடியாக்கும் மருத்துவச் சிகிச்சை முறை.

lithuresis : கல்லடைப்பு நீக்கம் : சிறுநீர்ப்பையில் மணிக்கல் கட்டியிருக்கும் கல்லடைப்பை நீக்குதல்.

litmus : நிற மாற்ற வண்ணப் பொருள் : சிறுநீரிலுள்ள ஒரு தாவர நிறமி இது அமிலத்தை (சிவப்பு) அல்லது காரத்தை (நீலம்) குறிக்கும் பொருளாகப் பயன்படுகிறது.

little's disease : கத்திரிகால் நோய் ; கால் கத்திரிபோல் திரிபடையும் ஒரு பிறவி ஊன நோய்.

Littritis : லிட்ரிட்டிஸ் (சிறுநீர்ச் சுரப்பி அழற்சி) : சிறுநீர்ச் சுரப் பிகள் வீக்கமடைதல். ஃபிரெஞ்சு அறுவை மருத்துவம் வல்லுநர் அலெக்சிஸ் லிட்ரே பெயரால் அழைக்கப்படுகிறது.