பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

action-mechanism of

64

activity


action-mechanism of : செயல் முறைமை.

action-mode of : செயல்விதம்.

action-potential : செயலழுத்தம்.

action-reflex : மறிவினை.

action-specific : தனித்த செயல்; குறித்த செயல்.

action-voluntary : அறிவினை.

actisorb : சீழ் நாற்றத் தடுப்புப் பையுறை : சீழ் கசியும் காயங்க ளிலிருந்து நாற்றத்தைத் தடுப்பதற்கான செயல்துண்டல் பெற்ற கரிப்பையுறைகள்.

actin : ஆக்டின் : தசை உயிரணுக்களிலுள்ள புரதங்களில் ஒன்று. இது, தசைச் சுருக்கம் உண்டாக்குவதற்காகத் தசைப்பற்றுடன் எதிர்வினை புரிகிறது.

activate : முடுக்கம்; கிளர்த்தல்.

activated : முடுக்கமான; முடுக்கப்பட்ட கிளர்வுற்ற.

activated charcoal : கிளர்வுற்ற கரி.

activation : தூண்டுதல்; செயல் படுத்துதல்; கிளர்வுறல்.

activation energy : கிளர்வுறு ஆற்றல்; முடுக்க ஆற்றல்.

activator : செயலூக்கி; செயலி : ஏதேனும் ஒன்று செயற்படத் தூண்டுகிற ஒரு பொருள். இது. இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பு, செரிமானப் பொருள், (என்சைம்) உற்பத்தி போன்ற செயல்களை ஊக்குவிக்கிறது.

active: செயலூக்கம்; உந்தப்பட்ட துடிப்பான : நோயாளியைப் பயன்படுத்திச் சுறுசுறுப்பான இயக்கங்களை உண்டாக்குதல். சிக்கலான அமைப்பான்களை கொண்ட ஒரு மருந்திலுள்ள ஒர் அமைப்பால் இத்தகைய செயலூக்கத்தை உண்டாக்குகிறது. நச்சுப் பூண்டிலிருந்து எடுக்கப்படும் 'பெல்லாடோன்னா' என்ற மருந்திலுள்ள அட்ரோப்பின் ஒரு செயலுக்கியாகும்.

active principle : செயல்படும் மூலம் : ஒரு மருந்தில் முக்கிய மாகச் செயல்படும் வேதிப் பொருள்.

active sites : செயல்படுமிடங்கள் : செயற்களங்கள்.

active mass : செயல்படு பொருண்மை.

active transport : கிளர்வுக் கடத்தல்.

activistic : பழமையான.

activitator : கிளர்வூக்கி.

activity : செயல்; இயக்கம்; நடவடிக்கை : சுறுசுறுப்பாக இருத்தல்.