பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

low birthweight

650

lumbrjcai


low birthweight : குறைந்த பிறப்பு எடை : பிறக்கும் குழந்தையின் எடை 25 கி.கிராமுக்கு குறைவாக இருத்தல்.

Lowe's disease : லோவ் நோய் : கண் சார்ந்த குருதிக் குழாய் நோய். அமெரிக்க நோயியலறிஞர் சார்லஸ் லோவ் இதனை விவரித்துரைத்தார்.

lozenge : இனியம்.

LRTI : கீழ்மூச்சுக் குழாய் நோயழற்சி.

LSD : எல்.எஸ்.டி டையெத்திலாமைட் அமிலம்.

lubb-dupp : இதயஒலி : லப்-டப் என்று இதயம் சுருங்கி விரிவதால் ஏற்படும் ஒலி.

lubricants : மலமிளக்கி மருந்து; மசகு : மலம் எளிதாக வெளி யேறுவதற்கு உதவும் இளக்கும் மருந்து. உராய்வுக் காப்புப் பொருள்.

lubrication : மசகிடல்.

lucid : அறிவுத் தெளிவு நிலை; குழப்பமற்ற : மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்திய நிலையிலுள்ளவர் அவ்வப்போது நல்லறிவுடன் தெளிவாக இருப்பர். இது அறிவுத் தெளிவு நிலை எனப்படும்.

lucid interval : இடைநிலைத் தெளிவு; நல்லறிவு இடைவேளை : பைத்தியம் பிடித்தவர்களின் நல்லறிவுள்ள இடைவேளை.

lucidit : தெளிமை.

lues : ஒட்டுநோய்; கொள்ளை நோய்.

sugol's solution : லூகோஸ் கரைசல் : அயோடினும், பொட்டாசியம் அயோடைடும் கலந்த கரைசல் கேடயச் சுரப்பி நச்சு நீக்க அறுவை மருந்துக்கு முன் பயன்படுத்தப்படுகிறது.

lumbago : இடுப்பு வாதநோய்; இடுப்பு வாதவலி; முதுகுவலி : கீல்வாதநோய் முதுகின் கீழ்ப் பகுதி இயங்க முடியாதவாறு வலி உண்டாதல்.

lumbar : கீழ் முதுகு இடை: இடுப்பு நரம்பு : இடுப்புப் பகுதித் தண்டெலும்பு, இடுப்புப் பகுதியைச் சார்ந்த.

lumbar, buncture : முதுகுத் துளையிட.

lumbo-abdominal : இடுப்பு-அடிவயிறு சார்ந்த : இடுப்பையும் அடிவயிற்றையும் சார்ந்த.

lumbo-costal : இடுப்பு-விலா எலும்பு சார்ந்த : இடுப்பையும் விலா எலும்புகளையும் சார்ந்த.

lumbosacral : இடுப்படி நரம்பெலும்பு சார்ந்த : இடுப்பையும், இடுப்பு நரம்பையும் இடுப்படி முட்டு முக்கேரன எலும்பையும் சார்ந்த.

lumbrical : விரல்வளைவுத் தசை : கைகால் விரல்களை வளைப் பதற்கான தசைகளில் ஒன்று.