பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lumen

651

lymecycline


lumen : உன்னிடம்.

Luminal : லூமினால் : ஃபெனோ பார்பிட்டோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

iumpectomy : கட்டி அறுவை : ஒரு கட்டியைச் சுற்றியுள்ள திசுக்களை மிகக் குறைந்த அளவு அகற்றி கட்டியை நீக்குவதற்கான அறுவை மருத்துவம்.

lumecy : கிறுக்கு.

lumate : பிறையுரு.

lumatic : பித்தன்; கிறுக்கன்.

lumatic asylum : மனநல பாதுகாப்பகம்.

lungs : நுரையீரல் : நெஞ்சுக்கூட்டின் பெரும்பகுதியிலுள்ள இரண்டு முக்கியச் சுவாச உறுப்புகளில் ஒன்று. இவை இரண்டையும் இதயமும், நுரையீரல் இடையிதயமும் தனியே பிரிக்கின்றன.

tungwort : நுரையீரல் பூண்டு : நுரையீரல் நோய்க்கு நல்லது என்று கருதப்படும் காளான் வகைப் பூண்டு.

lumula : நகப்பிறை; நுண்பிறை : நகத்தின் வேர்ப்பகுதியில் பிறை வடிவிலுள்ள வெண்பகுதி.

lupus : தோல்படை; தோல் முடிச்சு நோய் : தோலில் உண்டாகும் பல் வேறு படை நோய்களில் ஒன்று.

luteinization : சுரப்பித் திசுமாற்றம் : சூல்முட்டை வெளி யேற்றத்தைத் தொடர்ந்து, கரு அண்டச் சுரப்பியை சுரப்பித் திசுவாக மாற்றுகிற செயல் முறை.

luteinizing hormone(LH) : சூல் வெளிப்பாட்டு இயக்குநீர் : பெண்களிடம் சூல் வெளிப்பாட்டைத் தூண்டுகிற இயக்குநீர்.

Lutembacher's syndrome : லூட்டெம்பாஷர் நோய் : ஈரிதழ் தடுப்பிக் குறுக்கம், இது தமனி இடைச்சுவர்க் கோளாறுடன் தொடர்புடையது. இதனை ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் ரெனேலுட்டம்பாஷர் விவரித் துரைத்தார். luxation : மூட்டுவிலகல்; மூட்டு நழுவல்; மூட்டுப் பிறழ்வு : மூட்டு இடம் பெயர்த்தல்.

Luxuary perfusion syndrome : மூளைக் குருதிப்பாய்வு அதிகரிப்பு : அளவுக்கு மீறிய வளர்சிதை மாற்றத் தேவைகளால் மூளை இரத்தப் பாய்வு ஒட்டு மொத்தமாக அதிகரித்தல்.

lycopodium : பாசிப்பொடி : பாசி வகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவத்தில் உறிஞ்சு பொருளாகப் பயன்படும் நுண் பொடிவகை.

lymecycline : லைமிசைக்கிளின் : டெட்ரசசைக்கிளின் லைசின் வழிப்பொருள்களில் ஒன்று.