பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lymph node

653

lymphopaenia


lymph node : நிணநீர் தீசுத் திரட்சி; நிணக்கணு : நிணநீர் நாளங்களின் வழியிலுள்ள நிணநீர்த் திசுக்களை திரட்சி அடைதல்.

lymphoblast : நிணநீர் திசு முன்னோடிப் பொருள்; நிண முன்னணு : முதிர்ச்சியடைந்த நிண நீர்த் திசுக்களிலுள்ள பல சிறிய வெள்ளைக் குருதியணுக்களில் ஒன்றில் இருக்கும் முதிர்ச்சியடையாத முன்னோடிப் பொருள்.

lymphocyte : வெள்ளைக் குருதி அணு; நினவணு : ஒரு கருமையம் உள் வெள்ளையணு, இது அடர்ந்த வண்ணச்சாயலுடன் இருக்கும். இதில் அடர்த்தியான குரோமாட்டின், வெளிறிய நிறமுடைய திசுப்பஸ்மம் அடங்கி இருக்கும். இது, "B", "T" வெள்ளைக் குருதியணுக்கள் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இவை முறையே உடல் நீரியல், உயிரணு ஏமக்காப்புக்குக் காரணமானவையாகும்.

lymphoedema : நிணநீர் இழைம அழற்சி : நிணநீர்த் தேக்கத்தினால் பிளவுகளிலுள்ள திரவம் திரள்வதன் காரணமாக கைகால் பகுதிகளில் கடுமையான இழைம அழற்சி உண்டாதல்.

lymphocytosis : வெள்ளைக் குருதியணுப் பெருக்கம் : இரத்தத்தில் இயல்பான வெள்ளைக் குருதியணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல்.

Iymphography : நிணநீர்நாள ஊடுகதிர்ப்படம் : நிணநீர் நாளத்தில் ஒப்பீட்டு ஊடகத்தைச் செலுத்துவதைத் தொடர்ந்து நிணநீர்நாளங்களையும், நிண நீர்த்திரள்களையும் ஊடுகதிர்ப் படம் எடுத்தல்.

lymphoma : நிணநீர்த் திசுக்கட்டி; வடிநீர்ப் புத்து : நிணநீர்த் திசுக்களில் உண்டாகும் கடுமை இல்லாத கட்டி இது, நிணநீர்க் கரணைகளிலிருந்து உண்டாகிறது.

lymphorrhoea : நிணநீர் மிகை வெளியேற்றம் : பல்வேறு நிண நீர்நாளங்களிலிருந்து நிணநீர் மிகுதியாக வெளியேறுதல்.

lymphomatoid granulomatosis : நிணநீர்த் திசுக்கட்டி : நுரையீரல், கிறுநீரகம், தோல், மைய நரம்பு மண்டலம் ஆகியவற்றைப் பாதிக்கும் ஒரு சுற்றோட்டக் கோளாறு. இது ஏமக்காப்பு அடக்கச் சிகிச்சை மூலம் குணப்படுத்தப் படுகிறது.

lymphomatosis : பன்முக நீர்த் திசுக்கட்டி : உடலின் பல்வேறு பகுதிகளில் பன்முக நிணநீர் திசுக்கட்டிகள் உண்டாதல்.

lymphopaenia : வெள்ளைக் குருதியணுக் குறைபாடு : இரத்