பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lymphorrhagin

654

lysozyme


தத்தில் வெள்ளையணுக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருத்தல்.

lymphorrhagin : மிகைநிணநீர்க் கசிவு : நிணநீர் அண்டகோசத்தில் உருவாகியுள்ள குமிழ்களிலிருந்து நிணநீர் பெருமளவில் வெளியேறுதல்.

lymphosarcoma : நிணநீர்த்திசுக் கழலை; நிணநீர் திசுப்புத்து : நிண நீர்த்திசுக்களில் உண்டாகும் உக்கிரமான கட்டி.

lymph scrotum : நிணநீர் அண்ட கோசம் : அண்டகோசத்தின் தோல் சார்ந்த நிணநீரின் விரிவாக்கம் நெளிதிறன் என்ற வகையில் காணப்படும் இழை ஒட்டுண்ணி நிலை. இது அண்டகோசத் தோலின் ஒட்டு மொத்தச் சுருள் மடிப்புடன் தொடர்புடையது.

lyophile : ஊடுகவப்பு.

lyophilization : உறைபொருள்; ஊடுகவப்பு : மிக அதிகமான வெற்றிடத்தில் உறைந்திருக்கும் பொருள் விரைவாக உறைதல், நீர்வடிதல் காரணமாக ஒர் உறுதியான உயிரியல் பொருள் உற்பத்தியாதல்.

lysine : லைசின் : வளர்ச்சிக்குத் தேவையான இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று.

lysis : அழிவு; மீன் நிலை.

Lysol : நோய்த் தொற்றல் தடுப்பு நெய் : நச்சுத்தடை மருந்தாகப் பயன்படுத்தப்படும் நீரில் கரையத்தக்க சவர்க்கார நெய்க் கலவை வகை. இது சவர்க்காரக் கரைசலில் அடங்கியுள்ள 50% கிரிசோல்.

lysosome : லைசோசைம் : நுண்ணிய சவ்வு இழை சூழ்ந்துள்ள திசுப்பாய்ம உயிரணு உறுப்பு. இதில் பல்வேறு சீரணச் செரிமானப் பொருள்கள் அடங்கி உள்ள உயிரணுக்களில் இருக்கும்.

lysozyme : லைசோசைம் : நோய்க் கிருமிகளை எதிர்க்கக்கூடிய அடிப் படைச் செரிமானப் பொருள் (என்சைம்). இது கண்ணீர், எச்சில் போன்ற உடல் திரவங்களில் அடங்கியுள்ளது.