பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

maculopathy

657

magnesium...


maculopathy : கருவிழிப்புள்ளி மாற்றம் : கண்ணின் விழித்திரைப் புள்ளியைப் பாதிக்கும் நோய்க்குறி மாறுதல்கள்.

mad cow disease : பசு வெறி நோய் : பசுக்களுக்கு ஏற்படும் மூளையைப் பாதிக்கும் மூளை வீக்க நோய்.

madarosis : புருவமயிர் இழப்பு : புருவங்கள் அல்லது கண்ணிமை மயிர்களை இழத்தல்.

madecassol : மேடிக்காசோல் : எலும்புப் புரத உற்பத்தியைத் தூண்டி நோயைக் குணப்படுத்த உதவும் களிம்பு மருந்தின் வணிகப் பெயர்.

Madelung's disease : மேடிலங்க் நோய் : நெஞ்சுக்கூட்டின் பின் பகுதியின் மேற்புறம், தோள்கள், கழுத்துகள் ஆகியவற்றின் மீது பொது இயல்பான ஒரு சீரான பெருத்த திசுக்கள் படிந்திருத்தல். ஜெர்மன் அறுவை மருத்துவ வல்லுநர் ஆட்டோ மேடிலங்க் பெயரால் அழைக்கப் படுகிறது.

madribon : மேட்ரிபோன் : சல் ஃபாடை மெத்தோக்சின் மருந்து.

madura foot : மதுரைப் பாதம்; மதுரைத் தாள் : இந்தியாவிலும் வெப்ப மண்டல நாடுகளிலும் பாதத்தில் ஏற்படும் பூஞ்சண நோய். இதனால் வீக்கம் உண்டாகி கரணைகளும், உட்புரைப் புண்களும் ஏற்படும். இறுதியில் குருதி நச்சுப்பாடு உண்டாகி மரணம் விளையும். குணப்படுத்த அந்தப் பாதத்தை வெட்ட வேண்டும்.

magenta tongue : ஒண் சிவப்பு நாக்கு : நாக்கு அடர் சிவப்பிலிருந்து கருஞ்சிவப்பு நிறத்தில் இருத்தல். ரிபோஃபிளேவின் பற்றாக்குறை காரணமாக மென்மையான நாக்கு இவ்விதம் தோன்றும்.

maggot : ஈழும் புழு.

magnesium carbonate : மக்னீசியம் கார்பொனேட் : இரைப்பைப் புண்ணின் போது, வயிற்றுப் புளிப்பகற்றும் பேதி மருந்தாகப் பயன்படும் ஒரு தூள் மருந்து.

magnesium hydroxide : மக்னீசியம் ஹைட்ராக்சைடு : மிகவும் பயனுள்ள வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து மலமிளக்கு மருந்து. இது வெறும் வயிற்றில் நீர்த்த கரைசலாகக் கொடுக்கப்படுகிறது. தோல் வீக்கத்திற்கு இதன் 25% கரைசலைக் கொண்டு ஒற்றடம் கொடுக்கப்படுகிறது. கொப்புளங்கள், அரசபிளவைகள் ஆகியவற்றுக்கு கிளிசரினுடன் கலந்த குழம்பு மருந்தாகப் பூசப்படுகிறது. உடலில் மக்னீசியம் குறைபாடு இருந்தால், ஊசி மூலம் உடலில் செலுத்தப்படுகிறது.

magnesium trisilicate : மக்னீசியம் டிரைசிலிக்கேட் : மென்மை யான, வயிற்றுப் புளிப்பகற்றும் தன்மையுடைய தூள் மருந்து;