பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

magnetic reson...

658

malabsorption


சுவையற்றது; வெண்ணிறமானது. இரைப்பைப் புண்ணுக்குப் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

magnetic resonance imaging : காந்த நாடி அதிர்வு உருக்காட்சி : உடலின் வழியே மெல்லிய கண்டங்களைப் பரிசோதிப்பதற்காக உருக்காட்சிப் புலத்தையும் கதிரிய அலைவெண் சைகைகளையும் உண்டாக்கும் அணு காந்த நாடி உத்தி. இதில் ஊடு கதிர் (எக்ஸ்-ரே) பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை.

magnetic resonance MR : காந்த நாடி அதிர்வு எம்.ஆர் : ஒரு நிலையான காந்தப் புலம், பொருத்தமான நாடி அதிர்வு வெண் காந்தபுலத்தின் மூலம் தூண்டப்பட்டபின்பு அந்தக் காந்தப் புலத்திலுள்ள மையக் கருவினால் வெளியிடப்படும் மின்காந்த விசையை ஈர்த்துக் கொள்ளுதல் அல்லது வெளிப்படுத்துதல்.

magnetotherapy : காந்த மருத்துவம் : நோய்களைக் குணப்படுத் துவதற்குக் காந்தங்களைப் பயன் படுத்துதல்.

magnum : பெரும்புழை; பெரிய : தலையோட்டின் பின் எலும்பிலுள்ள பெரும்புழை போன்ற பெரிய புழை.

magor : பெரிய; வயதின.

major affective disorder : கடும் உளவியல் நோய் : உளவியல் கோளாறுகளின் ஒரு குழுமத்தைச் சேர்ந்த ஒரு நோய். இதனால் கடுமையான மற்றும் பொருத்தமற்ற உணர்வுத் துலங்கல்கள், மனப்போக்கில் நீண்ட கால மற்றும் இடைவிடாத குழப்பங்கள், மனச்சோர்வு அல்லது பித்தநிலை போன்ற பிற நோய்க்குறிகள் தோன்றுகின்றன.

major basic protein : உயிரணு மிகைப் புரதம் : சிவப்பு ஊதாச் சாய உயிரணு மிகைக் குருணைகளில் காணப்படும் புரதம் இது மூச்சுக் குழாய் தோலிழைமச் சேதம் உண்டாக்குகிறது. இது ஈளை நோயுடன் (ஆஸ்துமா) தொடர்புடையது.

major surgery : பெரிய அறுவை மருத்துவம் : பொது உணர்ச்சி நீக்கம் அல்லது செயற்கைச் சுவாச உதவி போன்றவை தேவைப்படும் ஒரு அறுவை மருத்துவ செய்முறை.

mal : நோய்; கேடு.

malabsorption : வயிற்றுப் போக்கு அகத்துறிஞ்சாமை; உள்ளுறிஞ்சு திறனற்ற; உள்ளீர்ப்புக் கேடு; குறை உறிஞ்சுகை : குழந்தைகளுக்கான உணவு செரித்த பின் குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படாத நிலையில் அப்படியே திரவ மலமாக வெளியேறுதலால் ஏற்படும் வயிற்றுப் போக்கு புரதச்சத்து.