பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mastomenia

666

maturational...


mastomenia : மார்பக மாதவிடாய்ப் போக்கு : மார்பகத்திலிருந்து உண்டாகும் பதிலியக்க மாதவிடாய்ப் போக்கு.

mastoid : பொட்டெலும்புக்கூம்பு : பொட்டெலும்புச் கூம்பு முனைப்பு பொட்டெலும்புக் கூம்பு முனைப்பின் மேல் வரும் கட்டி.

mastoid operation (mastoidectomy) : செவிப்பறை அறுவை : செவிப்பறைக் கோளாறு நீக்குவதற்கான அறுவை மருத்துவம்.

mastoiditis : செவிப்பறை வீக்கம் : செவிப்பறையில் காற்று உயிர ணுக்களில் ஏற்படும் வீக்கம்.

mastopathy : பால்சுரப்பி நோய் : பால்சுரப்பியில் உண்டாகும் ஒரு நோய்.

masturbation : தற்புணர்ச்சி; தன்னின்பம்; கைமுட்டி; கையின்பம்; கைப்புணர்வு : செயற்கைச் சிற்றின்பக் கையாடற் பழக்கம்.

matching : ஒத்திடல்; ஒப்பான.

match test : மூச்சோட்டச் சோதனை : மூச்சோட்டத் திறனை அளவிடுவதற்கான ஒரு சோதனை பற்றவைத்த தீக்குச்சியை 10 செ. மீ. துரத்தில் வைத்து ஒருவர் வாயால் ஊதி அணைக்க முடியவில்லை யென்றால், அவருக்கு மூச்சோட்டம் குறைவாக இருக்கிறது என்று கொள்ள வேண்டும்.

materia medica : மருந்துப் பொருள் ஆய்வு; மருந்தியல் நூல் : மருந்துகளின் தோற்றம், செயற்பாடு வேளையளவு ஆகியவற்றை ஆராயும் அறிவியல்.

maternity : தாய்மை : 1. பிள்ளை பேற்று நிலை, 2. மருத்துவ மனையில் தாய்மை மருத்துவத் துறை.

matrix : உயிரணுப் பொருள்; திசுக் கூழ்; மச்சை : உயிரணுக்களி டைய உள்ள பொருள்.

matron : செவிலித்தாய்; மாது; மாதரியார்.

matt : பாக்டீரிய மழுங்கல் பரப்பு : பாக்டீரியாவின் பண்பட்ட தகட்டுப் பாளத்தில் காணப்படும் மழுங்கல் பரப்பு. இது மேல் தோல் பொதியுறைகளை உற்பத்தி செய்வதில்லை.

matter, grey : மூளைச் சோறு.

matter, organic : கரிமப் பொருள்.

matter,white  : மூளை நார்.

mattery : சீழ் உள்ள; சீழ் கொண்ட.

maturation : கொப்புளம் பழுத்தல்; முற்றிய; முதிர்ந்த; முதிர்மை : கொப்புளம் சிக்கட்டி பழுப்புறுதல் முதிர்வு பெறுதல்.

maturational arrest : முதிர்மை நிறுத்தம் : 1. வைட்டமின் பி-12 பற்றாக்குறை அல்லது 1 போலிக் அமிலப் பற்றாக்குறை.