பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mature

667

M:E ratio


காரணமாக உண்டாகும் முதிராச் சிவப்பணுக் குருதிச்சோகையில் காணப்படுவது போன்ற முதிர்ந்த திசுப் பாய்மத்தில் முதிரா அணுக்கரு இருத்தல். 2. இயல்பான பெருக்கம் இருந்த போதிலும் விந்தணு உற்பத்தி செய்வதற்கு விந்தகம் தவறுதல்.

mature : முதிர்.

maturity : நிறை முதிர்ச்சி : 1. முழுமையாக வளர்ச்சியடைதல். 2. ஒரு இனப்பெருக்கம் செய்வதற்கத் திறன் பெறும் காலம்.

Maxidex : மாக்சிடெக்ஸ் : கண்களின் ஏற்படும் அழற்சியைத் தணிப்பதற்கான சொட்டு மருந்தின் வணிகப்பெயர்.

maxilla : தாடை; முக எலும்பு; மேல் தாடை : தாடை எலும்பு; முக்கியமாக மேல்தாடை எலும்பு.

maxillotomy : தாடை எலும்பு அறுவை மருத்துவம் : தாடை எலும்பின் அசைவுகளை இயல்விப்பதற்கு அறுவை மருத்துவம் செய்தல்.

Maxolon : மாக்சோலோன் : மெட்டோக்ளோப்ராமைட் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

Mayo's operation : மாயோ அறுவை மருத்துவம் : 1. குளம்பு விரல் வளைவுக்கள்க அடிக்கால் எலும்பின் நுனியைத் துண்டித்து எடுத்தல் 2 இரைப்பையின் துணியைத் துண்டித்து எடுத்து இரைப்பை இடைச்சிறு குடலை மறு உருவாக்கம் செய்தல். 3. கொப்பூழ்க் கொடி விரிசலைக் குணப்படுத்துவதற்காக அறுவைச் சிகிச்சை. 4, நாள அழற்சிச் சிரையினைத் தோலடி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

maze : வலைப்பின்னல் : அறிவுத்திறன் சோதனையில் பயன்படுத் தப்படும் குறுக்கு வெட்டுப் பாதைகளின் சிக்கலான மண்டலம்.

mazindol : மாசிண்டோல் : பசியைத் தூண்டும் ஒரு மருந்து.

mazoplasia : பால்மடி மிகைத் திசு வளர்ச்சி : தசைநார் அழற்சி மற் றும் நாளச் செதிளுதிர்வுடன் சுடிய பால்மடி மிகைத் திசு வளர்ச்சி.

MBBS : எம்.பி.பி.எஸ் : மருத்துவம் மற்றும் அறுவை மருத்துவம் இளங்கலைப் பட்டம்.

MBC : எம்.பி.சி. : பெரும அளவு சுவாச திறன் (Maximum breathing capacity).

M:E ratio : எம்.இ. விகிதம் : முதிர்ச்சியுறும் எலும்பு மச்சை உயிரணுக்களுக்கும், எலும்பு மச்சையினுள் உள்ள எலும்பு மச்சை உயிரணுக்களுக்கு