பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acute abdomen

66

adamas


acute abdomen : கடும் வயிற்றழற்சி.

acute arthritis : கடும் மூட்டழற்சி.

acute braindisorder : கடும் மூளைக் கட்டிழப்பு.

acute cholecystitis : கடும் பித்தப்பை அழற்சி.

acute gastritis : கடும் இறைப்பை அழற்சி.

acute infection : கடும் தொற்று; உடனடித் தொற்று.

acute poisoning : கடும் நஞ்சேற்றம்.

acute pulpities : கடும் பற்கூழ் அழற்சி.

cutemenia : கடும் கிளர்ச்சி.

acyanosis : நீலநிறமின்மை : ஆக்சிஜன் சரிவர ஊட்டப் படாத இரத்தம் சுழல்வதனால் தோல் நீலநிறமாகக் காணப் படாதிருத்தல்.

acynote : நீலமிலா.

acyanotic : நீலத்தோலின்மை : பிறவியிலேயே உண்டாகும் நெஞ்சுப்பை நாளக் கோளாறுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதற்குப் பயன்படும் சொல்.

acyclia : உடல் நீர்ம ஓட்டத்தடை.

acyclovir : அசிக்கோவிர் : தேமல், படர்தாமரை போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் கிருமி ஒழிப்பு மருந்து.

acyesis : கருத்தறிக்காமை; பெண் மலடு.

acyltransferase : அசிட்டிரான்ஸ்பரேஸ் : ஒரு வேதிப்பொருளில் உள்ள அசைல் குலக்கூறுகளை மற்றொரு வேதிப்பொருளுக்கு மாற்றும் தன்மையுள்ள நொதிப் பொருள்.

acystia : சவ்வுப்பை இன்மை; பித்த சிறுநீர்ப்பையின்மை :பித்த நீர்ப்பை, சிறுநீர்ப்பை ஆகியவை பிறவியிலேயே இல்லாதிருத்தல்.

adactyly : பிறவி விரலின்மை : பிறவியிலேயே கை அல்லது காலில் விரல் இல்லாதிருத்தல்.

adamantine : கடினமான; பற்சிற்பி.

adamantinoma : பற்சிற்பிப்புர்று : பற்சிற்பியில் தோன்றும் புற்றுக் கழலை. இது ஒரு தீங்கிலா புற்று வகையைச் சார்ந்தது.

adamantoblast : பற்சிற்பி அணு : பல் உருவாகும்போது பற்சிற்பியை உருவாக்கும் அணுவகை.

adamantoma : பற்சிற்பிப் புற்று.

adamas : மாறா; நிலைத்த; நிலையான.