பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mediastinoscopy

669

mediterranean...


mediastinoscopy : நுரையீரல் இடையிதழ் அறுவை : நுரையீரல் இடைத் தடுக்கிதழைக் கண்ணால் பரிசோதிப்பதற்காகச் செய்யப்படும் ஒரு சிறிய அறுவை முறை.

mediastinoscopy : நுரையீரல் இடையிதழ் ஆய்வு : கழுத்தில் துளையிட்டு அக நோக்குக் கருவியைச் செருகி நுரையீரல் இடையிதழை ஆராய்தல்.

mediator : இடையாள்.'

medical : மருத்துவம் சார்ந்த; மருத்துவ : 1. மருத்துவ அறிவியல் தொடர்புடைய 2 மருந்துகள் மூலம் சிகிச்சை செய்தல். இது அறுவைச் சிகிச்சையிலிருந்து வேறுபட்டது.

medicament : மருந்து : குணப்படுத்தும் மருந்து.

medicare : மருத்துவக் கவனிப்பு : சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் உள்ளடங்கிய சுகாதாரக் கவனிப்புத் திட்டம்.

medicated : மருந்துடன் கலத்தல் : மருந்து சார்ந்த பொருளை கரு வாகக் கலத்தல்.

medication : மருத்துவ பண்டுவம; மருந்தளிப்பு : 1. மருந்துகள் கொடுத்து நோய்க்கு மருத்துவ மளித்தல், 2. மருந்து கொண்டு செறிவூட்டுதல், 3. குணப்படுத்தும் மருந்து.

medicinal : மருந்துசார்ந்த : குணப்படுத்தும் பண்புகள் கொண்ட.

medicine : மருத்துவம் (மருந்து) : மருத்துவத்துறை; மருத்துவக் கலை; மருந்து; உட்கொள்ளும் மருந்து.

medicine,clinical : செய்மருத்துவம்.

medicine,department : மருத்துவத்துறை.

medicine, preventive : தடுப்பு மருத்துவம்.

medicine, social and preventive : சமூகப் பாதுகாப்பு மருத்துவம்.

medico : மருத்துவர்.

medicochirurgical : மருத்துவ அறுவை : மருத்துவம், அறுவை மருத்துவம் இரண்டும் சார்ந்த.

medicosocial : மருத்துவ சமூகவியல் : மருத்துவம், சமூகவியல் இரண்டும் சார்ந்த.

meditation : தியானம் : தியானம் செய்யும் கலை, ஆழ்ந்த எண்ணம் அல்லது தீவிர ஆழ் நிலைச் சிந்தனை. ஒருவர் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு, சீரான காலஅளவுகளுக்கு அமைதியாக அமர்ந்து, தளர்வாக இருத்தல்.

mediterranean anaemia : மத்திய தரைக்கடல் குருதிச் சோகை : இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைபாட்டினால் உண்டாகும் "தாலசேமியா" என்னும் பிறவிக் குருதிச் சோகை நோய்.