பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wlediterranean...

670

medulla oblongata


Mediterranean fever : மத்திய தரைக்கடல் காய்ச்சல் : இது ஒரு குடும்ப நோய். இதில் அதிகக் காய்ச்சல், வயிற்றறை உறை அழற்சி, நுரையீரல் சவ்வழற்சி, முட்டுவீக்கம் ஆகியவை அடிக்கடி உண்டாகும். இதற்குக் கோல்கிசின் மருந்து வாய்வழி கொடுக்கப்படுகிறது. இது நோய்த் தடுப்பு மருந்தாகச் செயற்பட்டு, அமிலாய்ட் திரட்சி நோய் பீடிப்பதைத் தடுக்கிறது.

medium : ஊடுபொருள்; ஊடகம்; உயிரளம்; வளர்ப்பு பொருள்; வளர் சாதனம் : பாக்டீரியாவியலில் உயிரிகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் பொருள்.

medrogestone : பெருஞ்சுரப்பிச் சுரப்பு நீர் : பெண்களுக்குரிய ஒர் இயக்கு நீர் (ஹார்மோன்). இது வாய்வழி அல்லது ஊசி வழி செலுத்தப்படுகிறது. இது பெருஞ்சுரப்பியினைச் சுருங்கச் செய்கிறது.

medrone : மெட்ரோன் : மெத்தில் பிரெட்னிசோலான் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

medroxyprogesterone : மெட்ரோக்சிபுரோஜெஸ்டின்ரோன் : அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுப்பதற்குப் பயன்படும் ஒரு வகை இயக்கு நீர் மருந்து. இது சிறுநீர்க் குருதிப் போக்கு மாதவிடாய் தோன்றாமை, கருப்பைப் பிளவை, கருப்பை உட்புறச் சவ்வு வீக்கம் ஆகியவற்றுக்கப் பயன் படுகிறது. குறுகிய காலக் கருத்தடைப் பொருளாகவும் பயன் படுத்தப்படுகிறது.

medroxyprogesterone acetate : மெட்ரோக்சிபுரோஜெஸ்டிரோன் அசிடேட் :90 நாட்கள் வரைச் செயற்படக்கூடிய நீண்டகாலக் கருத்தடை மருந்து. இது ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது.

medulla : மச்சை; அகணி; முகுளம் : நீண்ட எலும்பின் மையத்திலுள்ள உட்சோறு.

medullary : முகுள; அகணிய.

megacaphaly : புடைத்தலை.

medulloarthritis : எலும்பு மச்சை அழற்சி : ஒரு நீண்ட எலும்பின் கடற்பஞ்சு போன்ற முட்டு முனைகளில் ஏற்படும் வீக்கம்.

medulloblast : எலும்பு மச்சை உயிரணு : நரம்புப் புழையின் ஒர் உயிரணு. இது நரம்பு உயிரணுவாகவோ, மூளை ஆதாரத் திசுவாகவோ உருவாகலாம்.

medullo blastoma : சிறுமூளைக்கட்டி : குழந்தைகளுக்குத் தலையின் பின்பக்கத்திலுள்ள சிறு மூளையின் நடுப்பகுதியில் தோன்றும் விரைவாக வளரக் கூடிய உக்கிரமான கட்டி.

medulla oblongata : பின்மூளை : மூளையின் பின்பகுதி. இது சுவாசம், இதயத்துடிப்பு போன்ற உடலுக்கு இன்றியமையாத