பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mefenamic acid

671

megalocyte


பெரும்பாலான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துகிறது.

mefenamic acid : மேஃபெனாமிக் அமிலம் : நோவகற்றும் மருந்து வீக்கத்தை தணிக்கவும், காய்ச்சலைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

mefruside : மெஃப்ரூசைட் : சிறுநீர்ப் போக்கினைத் தூண்டும் ஒரு மருந்து.

mega : மகா : 1. மிகப்பெரிய அளவை அல்லது மட்டுமீறிய அளவைக் குறைக்கும் இணைப்புச் சொல். 10 இலட்சம் அளவு அலகைக் குறிக்கும் சொல்.

megabladder : மகா சிறுநீர்ப்பை : சிறுநீர்ப்பை மட்டுமீறி விரி வடைதல்.

megacephalic : பெருந்தலை : தலை அளவுக்கு அதிகமாகப் பெரிதாக இருத்தல்.

Megaclor : மெகாக்ளோர் : குளோமோசைக்ளின் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

megacolon : விரிகுடல்; அகன்ற பெருங்குடல் : பெருங்குடல் விரி வடைந்தும், மிகையூட்டத்தால், பொருமியும் இருத்தல்.

megadose : மகாவேளை மருந்து : பரிந்துரை செய்த அளவைவிட மிக அதிகமான அளவில் கொடுக்கப்படும் வைட்டமின் வேளை மருந்து.

megakaryocyte : பன்முகக் கரு உயிரணு; பெருங்கருச்செல் : இரத்தத் தட்டனுக்களை உற்பத்தி செய்கிற மச்சையின் பெரிய பன்முக உட்கருக்களையுடைய உயிரணுக்கள்.

megaloblast : முதிராச் சிவப்பணு : வைட்டமின் B, அல்லது ஃபோலிக் அமிலப் பற்றாக் குறையினால் உண்டாகும் பெரிய உட்கருவுள்ள முதிராத இரத்தச் சிவப்பணுக்கள்.

megaloblastic anaemia : மகா குருதிச்சோகை : வைட்டமின் பி-12 அல்லது ஃபோலிக் அமிலப் பற்றாக்குறையினால் உண்டாகும் குருதிச் சோகை.

megalocyte : பெருஞ்செவ்வணு.