பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

megalomania

672

melanin


megalomania : தற்புகழ்ச்சிப் பித்து; தற்பெருமை நோய் : தற் பெருமைக் கோளாறு, உயர் அவாக் கிறுக்கு.

meibomian cyst : மயிர்ப்பை நெய்மச் சுரப்பிக் கட்டி : கண்ணிமையின் விளிம்பில் மயிர்ப்பை நெய்மச்சுரப்பிகளில் ஏற்படும் நீர்க்கட்டிகள்.

megalophthalmus : மகாகண் விரிவாக்கம் : கண்கள் மட்டு மீறி விரிவடைதல்.

megarectum : மகாமலக்குடல் : மலச்சிக்கல் காரணமாக உண்டாகும் மலம் நிறைந்து விரிவாக்கமடைந்த மலக்குடல்.

megavitamin therapy : மகா வைட்டமின் மருத்துவம் : நீரில் கரையக்கூடிய வைட்டமின்களை அதிக அளவில் கொடுத்தல்.

meglumin : மெக்லூமின் : ஒப்பீட்டு ஊடகத்திலுள்ள அயோடினாக்கிய அமிலங்களுடன் இணைந்த என்-மெத்தில் குளுக்கோமின். இது இழைமத் தன் மையை அதிகரித்து, நச்சுத் தன்மையைக் குறைக்கிறது.

megrim; megrima : ஒற்றைத் தலைவலி.

megrims : எழுச்சியின்மை : மனச்சோர்வு நிலை; வெறி எண்ணம்; அச்சந்தருகிற மனநோய் வகை.

meibomian glands : மயிப்பை நெய்மச் சுரப்பிகள் : கண்ணிமை பரப்பிலுள்ள வரிப்பள்ளங்களில் அமைந்துள்ள மயிர்ப்பை நெய்மச்சுரப்பி.

meigs' syndrome : கருப்பைக் கட்டி : மகோதரம் என்னும் அகட்டு நீர்க்கோவை, நெஞ்சுச் சளி இவற்றுடன் வரும் கருப்பை சார்ந்த கடுமையல்லாத திண்மையான கட்டி.

meiosis : கருமுளை இயக்க மாற்றம்; எண் குறை பகுப்பு : கருமுளை அணுக்களில் ஏற்படும் அணு இயக்க மாற்றக்கூறு. இது, இனப் பெருக்கத்தில் இரு பால்களின் பாலணுக்களும் இணைந்து கலந்து ஒன்றையொன்று பொலிவு படுத்தி கரு முதிர்ச்சியடைய உதவுகிறது.

melaena : கருமலம் : இரைப்பை, குடல் அழற்சியினால் ஏற்படும் இரத்தக் கசிவு காரணமாக கரு நிறத்தில் மலம் போதல்.

melancholia : அழுங்கு நோய் : வேண்டாத அச்சங்களுக்கு ஆட்படுத்தும் மனச்சோர்வு நோய்.

melancholy : மனச்சோர்வு; பெருந்துக்கம் : இயல்பான மனச் சோர்வு நிலை.

melanin : மைக்கருமை; கரியம் : தோல், முடி, கண்ணிமை ஆகிய