பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

menarche

675

meninges


கொண்டதை நினைவிற்குக் கொணரும் திறன். 2. செய்திகளைச் சேகரித்தல், சேமித்து வைத்தல், மீண்டும் நினைவுக்கு கொண்டுவருதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மனத்தகவல் மண்டலம்.

menarche : பூப்பு; பருவமடைதல்; திரட்சியடைதல்; பெண்மையடைதல்; பூப்படைதல்; முதல் மாதவிடாய் : மாதவிடாய்க் காலமும் மற்ற உடல் மாற்றங்களும் தொடங்கும் காலம்.

Mendelian : மெண்டலியன் : 1. கிரிகோர் மெண்டல் சார்ந்த அல்லது தொடர்புடைய. 2. கிரிகோர் மெண்டல் விளக்கிக் கூறிய மரபுத்தொடர்பு விதிகள்.

Mendel's law : மெண்டல் விதி : 1. ஒரே பண்பின் பல்வேறு வடிவங்கள், கலப்பின் போது அல்லது பிரிவின் போது ஒருங்கிணையாமல் தனித்தே இருந்துவரும். 2. ஒரே பண்பின் படிவங்கள், மறு இணைவின் வேறேதேனுமொரு பண்பின் வடிவங்களிலிருந்து தனித்தே இயங்கி வரும். இந்த விதியை ஆஸ்திரேலியத் துறவியும் இயற் கையறிஞருமான கிரிகோர் மெண்டல் வகுத்துரைத்தார்.

Mendelson's syndrome : மெண்டல்சன் நோய் : இரைப்பையிலுள்ள அமிலப் பொருள்களை உறிஞ்சுவதால் உண்டாகும் கடுமையான நுரையீரல் காயம். இது குறிப்பாக, மகப்பேற்று வலியின்போது பொது உணர்ச் சியிழப்பின் போது உண்டாகிறது. இது அமெரிக்க மகப்பேறு மருத்துவ அறிஞர் கர்ட்டிஸ் மெண்டல்சன் பெயரால் அழைக்கப்படுகிறது.

Menetrier's disease : மென்ட்ரியர் நோய் : மிகப் பெரும் உறுப்புப் பொருமல் இரைப்பை அழற்சி. இதில் இரைப்பை சளிச்சவ்வின் தோலிழைம உயிரணுக்கள் அளவுக்கு மீறி பெருகுவதன் காரணமாக, சுரப்பித் தனிமங்களுக்குச் சேதமடையாமல், கெட்டிப்படுதல் விரவிப் பரவுதல். ஃபிரெஞ்சு மருத்துவ வல்லுநர் பியர் மெனட்ரியர் பெயரால் அழைக்கப்படுகிறது.

meningeal : மூளை சவ்வு சார்ந்த : 1. மூளைச் சவ்வு தொடர்புடைய 2 புற்று நோய் பரவுதல். உக்கிரமான திசுக்கள் மூலம் மூளைச் சவ்வு ஊடுரு வல் பரவுதல். இதில் வாதசன்னி தலைவலி, மண்டையோட்டு நரம்பு முடக்கு வாதம் போன்றவை உண்டாகும்.

meninges : மூளைச்சவ்வுகள்; மூளை உறை : தண்டு மூளைக் கவிகைச் சவ்வுகள். இவை மூன்று வகையின: 1. மூளையையும் முதுகுத்தண்டையும் சூழ்ந்து கொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வு; 2. நடுவிலுள்ள சிலந்தி நூல் போன்ற சவ்வு; 3. அடிச் சவ்வுப் படலம்.