பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

meningioma

676

menolipsis


meningioma : தண்டு மூளைச் சவ்வுக் கட்டி; உறைப்பித்து : தண்டு மூளைக் கவிகைச் சவ்வில் மெல்ல மெல்ல வளரும் இழைமக் கட்டி

meningism : தண்டு மூளைச் சவ்வு அழற்சி நோய்க்குறி; உறைத் துன்பம் : தண்டு மூளை கவிகைச் சவ்வு அழற்சிக்கான அறிகுறிகள். கழுத்து விறைப்பாதல் இக்குறிகளில் ஒன்று.

meningitis : சவ்வழற்சி; மூளை உறைஅழற்சி : தண்டு மூளைக்கவிகைச் சவ்வில் ஏற்படும் வீக்கம். இதனை மூளை அழற்சி என்றும் கூறுவர்.

meningocele : மூளை உறைப் பிதுக்கம் : தண்டு மூளைக் கவிகைச் சவ்வு வளர்ச்சி.

meningococcemia : குருதியில் மெனிங்கோகாக்கேமியா : மூளை -முதுகுத்தண்டு சவ்வழற்சி உண்டாக்கும் கோளாக்கிருமியினால் ஏற்படும் ஒரு நோய். இதில் திடீரென காய்ச்சல் குளிர்நடுக்கம், தசை வாதம், குருதி சொட்டுக்கசிவு, கடும் உடல்சோர்வு ஆகியவை உண்டாகும்.

meningocyte : கருமுளைத் தோலிழைம உயிரணு : சிலந்திச் சவ்வு இடைவெளியின் கரு முனைத் தோலிழைம உயிரணு.

meniigomyelitis : முதுகுத்தண்டு மூளைச்சவ்வு அழற்சி; உறைத் தண்டழற்சி : முதுகுத்தண்டும் மூளைச் சவ்வும் வீக்கமடைதல்.

meningosis : எலும்பு சவ்வு இணைவு : பிறந்த குழந்தையின் மண்டையோட்டில் உள்ளது. போன்று, எலும்புகளின் சவ்வு இணைதல்.

meningoencephalitis : மூளை அழற்சி; உறை மூளை அழற்சி : முளையும், தண்டு மூளைக் கவிகை சவ்வு வீக்கமடைதல்.

meningovascular : மூளைச்சவ்வு குருதிநாளம் : மூளைச் சவ்விலுள்ள இரத்தநாளங்கள் தொடர்புடைய.

meninx : தண்டு மூளைக்கவிகைச் சவ்வு : மூளையையும் முதுகந் தண்டு நரம்பினையும் சுற்றிச்சூழ்ந்திருக்கும் மூவகைச் சவ்வுகளில் ஒன்று.

meniscectomy : முழங்கால் குருத்தெலும்பு அறுவை : காயம், இடப் பெயர்வு காரணமாக முழங்கால் மூட்டின் பிறை நிலா வடிவான குருத்தெலும்பினை அகற்றுதல்.

meniscus : குருத்துவளையம்; 1. பிறைக் குருத்தெலும்பு அரை வட்டக்குருத்து வளையம் : பிறை நிலா வடிவிலுள்ள முக்கியமாக முழுங்கால் முட்டிலுள்ள குருத்தெலும்பு. 2, குவிமட்டம் கண்ணாடிக்குழாய் களிலுள்ள நீர்மங்களின் குவிந்த மேற்பரப்புத் தோற்றம்.

menolipsis : மாதவிடாய்ப் போக்குக் குறைவு : எந்த வயதிலும் எந்தக் காரணத்தினாலும் மாதவிடாய்ப் போக்கு குறைதல்.