பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

menopause

mentoposterior


menopause : இறுதிமாதவிடாய்; மாதவிடாய் முடிவுறல்; மாதவிடாய் நிற்றல் : பெண்களுக்கு மாதந்தோறும் வரும் மாதவிடாய் நின்று போதல். இது பொதுவாக 45-50 வயதில் ஏற்படும். மாதவிடாய் நின்றபின் இனப் பெருக்கத்திறன் வராது.

menorrhagia : மிகை மாதவிடாய்ப் போக்கு; மாதவிடாய் மிகைப்பு; மாதவிடாய் பெரும் போக்கு : மட்டுமீறிய மாதவிடாய் போக்கு எற்படுதல்.

menorrhoea : குறைமாதவிடாய்ப் போக்கு : மாதவிடாய்ப் போக்கு அளவுக்கு குறைவாக ஏற்படுதல்.

menses : மாதவிடாய்; மாதவிடாய்ப் போக்கு; தீட்டு : வீட்டுவிலக்கு: தீண்டல்.

menses : மாதவிடாய்; தீட்டு :' கருப்பையிலிருந்து மாதந்தோறும் குருதிப்போக்கு ஏற்படுதல்.

menstrual : மாதவிலக்குக்குரிய : மாதந்தோறும் மாதவிடாய் நிகழ்கிற 28 நாட்கள் சுழற்சியில் 4-5 நாட்களுக்கு மாத விடாய் போக்கு நிகழ்வதாகும். மாதவிலக்கு சார்ந்த.

menstrual regulation : கருப்பை உறிஞ்சல் வெளியேற்றம் : கர்ப் பத்தில் மிகத் தொடக்க நிலையில் கருப்பையின் உறிஞ்சல் வெளியேற்றம்.

menstrual extraction : மாத விடாய்ப் பிரித்தெடுப்பு : 8 வாரக் கர்ப்பக் காலத்தின்போது உறிஞ்சல் பிரித்தெடுத்தல்.

menstruation : மாதவிடாய் வெளியேற்றம்; மாதவிடாய் ஒழுக்கு; மாதவிடாய்ப்போக்கு : பெண்களுக்கு 13 வயது முதல் தொடங்கி 45 வயது வரையில் மாதந்தோறும் இரத்தப்போக்கு ஏற்படுதல்.

menstruous : மாதவிடாய் குறித்த.

mental : மனநோய் மனநோயாளி) : பைத்தியம் பிடித்தல், மன நோயாளி, பைத்தியம் பிடித்து மருத்துவமனையில் இருப்பவர். 30 வயதானவர், 12 வயதான குழந்தைபோல் நடந்து கொண்டால் அவர் பித்த நிலையுடையவராவார்.

mentol : பச்சைக் கற்பூரம் : வாத நோய்க்கான களிம்பு மருந்து தயாரிக்கப் பயன்படும் பச்சைக் கற்பூரம்.

mentoplasty : முகவாய்க்கட்டை அறுவை மருத்துவம் : முகவாய்க் கட்டையின் உருத்திரிபுகளைச் சீர்செய்ய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தல். இதன் மூலம் வடிவம் அல்லது வடிவளவு மாற்றப்படுகிறது.

mentoposterior : முகம் முன் வரும் மகப்பேறு : மகப்பேற்று வலியின் போது முகவாய்க் கட்டைப் பின்பகுதி முன்னதாக வெளிப்படுதல்.