பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mepacrine

678

mesarteritis


mepacrine : மெப்பாக்கிரின் : முறைக்காய்ச்சலுக்கு (மலேரியா) எதிரான ஒரு செயற்கைப் பொருள். சில சமயம் வயிற்றிலுள்ள ஒட்டுண்ணியான நாடாப் புழுக்களுக்கு எதிராகவும் பயன் படுத்தப்படுகிறது.

meprobamate : மெப்ரோபாமேட் : மைய நரம்பு மண்டலத்தில் செயற்பட்டு மன அமைதியைக் கொடுக்கும் ஒரு மென்மையான உறக்க மருந்து.

mepyramine : மெப்பிராமின் : ஒவ்வாமையினால் உண்டாகும் தோல் நோய்களுக்குப் பயன் படுத்தப்படும் ஒருவகை மருந்து.

Merbentyl : மெர்பெண்டில் : டை சைக்கிளோமைன் என்னும் மருந்தின் வணிகப்பெயர்.

mercaptopurine : மெர்க்காப்டோப்பூரின் : குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான வெண் குட்ட நோய்க்குப் பயன்படுத் தப்படும் மருந்து.

mercurialism : பாதரச நச்சு விளைவு : பாதரசத்தினால் உடலில் ஏற்படும் நச்சு விளைவுகள் பண்டைக்காலத்தில் இது மேகப் புண்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.

mercuric oxide : பாதரச ஆக்சைடு : கண்வலி போன்ற கண் நோய்களுக்குப் பயன்படுத் தப்படும் நோய் நுண்மத்தடை மருந்து.

mercurochrome : மெர்க்குரோக்ரோம் : பாதரசம் அடங்கிய ஒரு வகைச் சிவப்புச் சாயம். நோய் நுண்மத்தடைப் பண்புகள் உடையது. பாதரச நிறமி.

mercury : பாதரசம் (மெர்க்குரி) : திரவ வடிவிலுள்ள ஒரே உலோகத் தனிமம். வெப்பமானி போன்ற அளவைக் கருவிகளில் பயன்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் மெர்குரஸ் உப்பு ஓரிணைத் திறமையுடையது; மெர்க்குரிக் உப்பு ஈரிணைத் திறங்கொண்டது.

Merkel cell : மெர்க்கெல் உயிரணு : தோலின் ஆழ்ந்த படுகைகளி லுள்ள தொடு உணர்வு ஏற்பு உயிரணு. இது ஜெர்மன் உடல் உட்கூறிய லறிஞர் ஃபிரட்ரிக் மெர்க்கெல் பெயரால் அழைக்கப் படுகிறது.

meroblastic : மிகை மஞ்சள்கரு சினைமுட்டை : பெருமளவில் மஞ்சள் கரு உடைய சினை முட்டை தொடர்புடைய அல்லது அதன் பண்புடைய. இந்த வேறுபாடு திகப்பாய்மத்தின் ஒரு பகுதியில் மட்டுமே காணப்படும்.

meromyosin : துணைத்தசைப் புரதம் : மையோசின் எனப்படும் தசைப்புரதத்தின் ஒரு துணை அலகு. இது கனமானதாக (H) அல்லது லேசானதாக (L) இருக்கலாம்.

mesarteritis : நடுத்தமனி அழற்சி; இடைத்தமனி அழற்சி : இதயத்