பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

methane

683

methoxamine


உடலில் நைட்ரஜன் சமநிலையை மீண்டும் ஏற்படுத்த தசைச் சோர்வினை நீக்கப் பயன்படுகிறது.

methane : மீத்தேன்(CH,) : கரிமப் பொருள்கள் அழுகி நொதிப்பதால் உண்டாகும், நிறமற்ற, மணமற்ற, எளிதில் தீப்பற்றக் கூடிய வாயு,

methaqualone : மெட்தாக்குவாலோன் : வாய்வழி கொடுக்கப்படும் துயிலுரட்டும் மருந்து. பார்பிட்டுரேட்டுகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.

methicillin : மெத்திசிலின் : பெனிசிலினேசை எதிர்க்கும் திறனு டைய ஒரளவு செயற்கை முறையில் தயாரிக்கப்படும் பெனிசிலின்.

methionine : மெத்தியோனின் : கந்தகம் அடங்கிய இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று. கல்லீரல் அழற்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

methylcellulose : மெத்திசெல்லுலோஸ் : நீர்வேட்கையுடைய கூழ்மப் புரதம். இது பேதி மருந்து தயாரிக்கவும், கழுவு நீர்மங்களின் ஊடுகலப்பு விளைவுகளைச் சீராக்கவும் பயன் படுகிறது.

methylmalonic aciduria : மெத்தில் மாலோனிக் அமிலச் சிறுநீர் : சிறுநீரில் மெத்தில்மாலோனிக் அமிலம் அளவுக்கு அதிகமாக இருத்தல். இது மெத்தில் மாலோனிக் அமிலப் பெருக்கத்தின்போது காணப்படும்.

methixene : மெத்டிக்சென் : பார்க்கின்சன் நோய்க்குப் பயன்படும், நச்சுக்காரம் போன்ற ஒரு மருந்து. இது உடல் நடுக்கத்தைக் குறைக்கிறது.

methocarbamol : மெத்தோகார்பமோல் : தசைக் காயங்களின் போது பயன்படுத்தப்படும் வலி நீக்க மருந்து.

methohexitone : மெத்தோஹைக்சிட்டோன் : மெத்தோஹெக்கிட்டால் சோடியம் என்ற மருந்தின் வணிகப்பெயர். மயக்க மருந்தாகப் பயன்படுகிறது.

methotrexate : மெத்தோட்ரெக்சேட் : ஃபாலிக் அமிலம் எனப்படும் வைட்டமினுக்கு எதிர்ப் பொருள் புற்றுநோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்து.

methotrim eprazine : மெத்தோட்ரிம் எப்ராசின் : நோவகற்றும் மருந்தாகவும் உறக்க மருந்தாகவும் பயன்படும் குளோரோப்ரோமைசின் போன்ற ஒரு மருந்து. இது முரண்மூளை நோய், கடைக்கணு நோய்கள் போன்றவற்றில் பயன்படுகிறது.

methoxamine : மெத்தோக்சாமின் : உணர்விழப்பின் போது இரத்த அழுத்தத்தை மீட்பதற்காகப் பயன்படுத்தப்படும் மருந்து. இதனை நரம்புவழியாக அல்லது தசை வழியாகச் செலுத்தலாம்.