பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

methoxyflurane

684

Metopirone


methoxyflurane : மெத்தாக்சிஃபுளுரான் : ஒரு திரவ மயக்க மருந்து. இதன் ஆவியை நுகர்வதால் மயக்கம் உண்டாகிறது.

methoxaypheniramine : மெத்தோக்சின்ஃபெனிராமின் : மூச்சுக் குழாயை விரிவடையச் செய்யும் மருந்து.

metmyoglobin : மெட்மியோகுளோபின் : குருதிச்சிவப்புப் பொருளின் அயஅயனி, மியோ குளோபினில் ஆக்சிகரமாகி அயக அயனியாக மாறுகிறது.

methylated spirit : மெத்திலேற்றிய சாராயம் : குடிப்பதற்கு ஏற் புடையதாக இல்லாதவாறு 5% மர இரசகற்பூரத்தைலம் கலக்கப்பட்ட ஆல்க்ககால். இது சாராய அடுப்புகளுக்குப் பயன்படுகிறது.

methylcysteine : மெத்தில்சிஸ்டைன் : இருமல் சளியின் பசைத் தன்மையைக் குறைப்பதற்குப் பயன்படும் மருந்து.

methylpheno barbitone : மெத்தில்ஃபெனோபார்பிட்டோன் : காக் காய்வலிப்பு, முதுமைத்தளர்ச்சி ஆகியவற்றில் வலிப்பினைப் போக்குவதற்குப் பயன்படும் மருந்து.

methylprednisolone : மெத்தில் பிரெட்னிசோலோன் : வாதமூட்டு வலிக்குப் பயன்படுத்தப்படும் மருந்து இயல்புக்கு மீறிக் கண்விழி பிதுங்கியிருக்கும் நிலையில் இது ஊசிவழியாகச் செலுத்தப்படுகிறது.

methyisalicylate : மெத்தில் சாலிசைலேட் (பசுஞ்செடி எண்ணெய்) : எரிச்சலைப் போக்கவும், வாத வலியை நீக்கவும் எண்ணெயாக அல்லது களிம்பாகப் பூசப்படும் மருந்து.

methylscopolamine : மெத்தில்ஸ் கோப்போலாமின் : தசைச் கரிப்புக் கோளாறுகளுக்குப் பயன்படும் மருந்து முக்கியமாக இரைப்பை உள்ளுறுப்புத் தசைகளின் சுரிப்புக்குப் பயன் படுகிறது.

methylthiouracil : மெத்தில் தியூராசில் : கேடயச் சுரப்பு நீர் குறைக்கும் கலவை மருந்து.

methyprylone : மெத்திப்பிரைலோன் : உறக்க மூட்டும் பார் பிட்டுரேட் அல்லாத ஒரு மருந்து.

methysergide : மெத்திசெர்ஜைடு : கடுமையான ஒற்றைத்தலை வலியைக் குணப்படுத்து வதற்கான பயனுள்ள மருந்து.

Metinex : மெட்டினெக்ஸ் : மெட்டாலாசீன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

metolazone : மெட்டூலாசூன் : சிறுநீர்க்கழிவினை ஊக்குவிக்கும் மருந்து.

Metopirone : மெட்டோப்பைரோன் : மெட்டிராப்போன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.