பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

meziocillin

686

microcephalic


meziocillin : மெசியோசிலின் : ஆம்பிசிலின் போன்ற ஓர் உயிர் எதிர்ப்பொருள்.

mianserin : மியான்செரின் : மனச்சோர்வகற்றும் மருந்து. முக்கியமாக மனக்கவலையின் போது பயன்படுத்தப்படுகிறது.

Michel's clips : மைக்கேல் கிளிப் : காயங்களை மூடுவதற்குப் பயன் படும் சிறிய உலோகப் பிடிப்பு ஊக்குகள்.

miconazole : மைக்கோனாசோல் : பூஞ்சண நோய்த்தடுப்பு மருந்து. பெண்களின் கருவாயில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

micracoustic : நுண் ஒலியியல் : 1. மிக மென்மையான ஒலிகள் தொடர்புடைய 2 மிக மென்மையான ஒலிகளைப் பெருக்கம் செய்யும் செய்முறை.

microalbuminuria : நுண்வெண்புரத நீரிழிவு : சிறுநீரில் மிகச் சிறிதளவு வெண்புரதம் (அல்புமின்) செல்லுதல் இந்த அளவு, 24மணி நேரத்துக்கு 30300 மி.கி அளவுக்கு இருக்கலாம். இது வெளிப்படையாக சிறுநீரக நோய் தோன்றும் அபாயத்தைக் குறிக்கும் முக்கிய அறிகுறியாகும்.

microanalysis : நுண்பகுப்பாய்வு : ஒரு பொருளின் மிக நுண்ணிய அளவினை பகுப்பாய்வு செய்து சோதனை செய்தல்.

microangiopathy : குருதிநாளத் திண்மம்; நுண்குழல் நோய் : குருதி நாளங்களில் ஆதாரச் சவ்வு கெட்டியாதலும், இரட்டிப்பாதலும் நீரிழிவு எலும்புப் புரத நோய்களில் இது ஏற்படுகிறது.

microbe : நுண்ணுயிரி : பாக்டீரியா, திருகு கிருமிகள், நச்சுக் காய்ச்சல் நுண்ணுயிரி, நோய்க் கிருமி போன்ற ஓர் நுண்ணுயிரி.

microbiology : நுண்ணுயிரியல் : நுண்ணுயிரிகள் பற்றி ஆராயும் அறிவியல்.

microbiophotometer : நுண்ணுயிரி ஒளிமானி : பாக்டீரியா வளர்ச்சியை ஊடகத்தின் கலங்கல் மூலமாக அளவிடுவதற்கான ஒரு சாதனம்.

microblast : நுண் சிவப்பணு : மையக் கருவேற்றிய ஒரு சிறிய குருதிச் சிவப்பணு.

microblepharia : இயல்பிலா சிறு இமை : இமைகள் அளவுக்கு மீறி சிறிய செங்குத்துப் பரிமாணத்தில் இருக்கிற ஒரு வளர்ச்சித் திரிபு.

microbody : உயிரணுத் தனியுறுப்பு : சவ்வு சூழ்ந்த சிறுமணி போன்ற திசுப் பாய்மத் துகள்களும், செரிமானப் பொருள்களும் உள்ளடங்கிய விலங்கு மற்றும் தாவர உயிரணுக்களில் காணப்படும் ஒரு தனியுறுப்பு.

microcephalic : குருந்தலையர்; சிறிய தலை : இயல்பு மீறிய மிக சிறிய தலையை உடையவர்.