பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

microchemistry

687

microfilaria


microchemistry : நுண்வேதியியல் : வேதியியல் பொருள்களின் மிக நுண்ணிய அளவுகளைப் பகுப்பாய்வு செய்வது தொடர்பான வேதியியலின் ஒரு பிரிவு.

microcirculation : நுண்சுற்றோட்டம் : நுண்தமனிகள், தந்துகிகள், நுண்சிரைககள் ஆகியவற்றில் நடைபெறும் இரத்தவோட்டம்.

microcomputer : நுண்கணினி : தனது மையச் செய்முறையிலும், கட்டுப்பாட்டுச் சுற்று வழியிலும் ஒரு நுண் செய்முறைச் சாதனத்தைப் பயன் படுத்தும் கணினி.

microcornea : நுண்விழிவெண்படலம் : விழிவெண்படலம் அளவுக்கு மீறிச் சிறிதாக இருத்தல்.

microcurie : மைக்ரோ கியூரி : கதிரியக்கத்தினை அளவிடும் அலகு. இது ஒரு கியூரி அலகின் பத்துலட்சத்தில் ஒரு பங்கு.

microcyte : நுண்சிவப்பணு; சிற்றணு : இயல்பான அளவை விடச் சிறிதாகவுள்ள இரத்தச் சிவப்பணு. குறிப்பாக அயக் குறைபாட்டு இரத்தச் சோகையில் இது ஏற்படுகிறது.

microdetermination : நுண் அறுதியீடு : ஒரு பொருளின் மிக மிகச் சிறிய அளவுகளை வேதியியல் முறையில் பகுப்பாய்வு செய்தல்.

microdissection : நுண்கூறாக்கம் : பெரிதாக்கத்திலுள்ள திகக்களை கூறுகளாக்கப் பகுத்தாய்வு செய்தல்.

microdonita : நுண் பல்வரிசை : உடம்பின் உருவமைப்புக் மிகக் குறைவான சிறிய பல்வரிசை.

microenvironment : நுண்சூழல் : மிகநுட்பமான அல்லது நுண்ணிய கண்ணறைகள் உள்ள.

microfauna : நுண்விலங்கு உயிரிகள் : ஒருகுறிப்பிட்ட மண்டலத் திலுள்ள நுண்ணிய விலங்கு உயிரிகள்.

microfilament : நுண்ணிழை: உயிரணுக்களின் திசுப்பாய்மத்தில் காணப்படும் 5மிமீ. விட்டமுள்ள ஒளிக்கதிர் இழைமம்.

microfilaria : நுண்ணிழை ஒட்டுண்ணி; யானைக்கால் நுண்புழு; யானைக்கால் ஒட்டுண்ணி; வீக்க நுண்புழு : ஃபிலேரியோட்டியா என்ற குடும்பத்தைச் சேர்ந்த நீளுருளைப் புழுக்களின் முட்டைப் புழுக்கள். இவை 170-320 மைக்ரோன் நீளமுடையவை. இவை இரத்தத்தினுள் அல்லது தோலினுள் குடியேறுகின்றன. கொசுக்கள் மனிதனைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது இந்த நுண்ணிழை ஒட்டுண்ணிகளை உட் கொள்ளும்போது இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி முடிவடைகிறது. இந்த நுண்ணிழை ஒட்டுண்ணிகள் குருதியில் இரவில் தோன்று