பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

addisonian pernicious an...

68

adductor brevis


பொதுவாக தொற்றுக் கிருமிகள், காயங்கள், அறுவை மருத்துவம், மன அழுத்தம் போன்றவை காரணமாக ஏற்படும். பாதிக்கப்படும் நபருக்கு இரத்த அழுத்தம் குறைந்துவிடும். அதிர்ச்சி நிலை ஏற்படும். காய்ச்சல், பசியின்மை, சோர்வு, உடல்நீர் வறட்சி நிலை ஆகியவை ஏற்படும். காய்ச்சல், பசியின்மை, சோர்வு, உடல் நீர் வரட்சிநிலை ஆகியவை ஏற்படும்.

addisonian pernicious anaemia : அடிசோனியன் உயிர் போக்கும் இரத்தச் சோகை : இரைப்பையில் அகக்காரணி சுரக்காததால் உண்டாகின்ற மிகைப் பெருக்கக் குருதியணு சோகை நோய். இது ஒரு தன்தடுப்பாற்றல் நோய். இந்த நோயின்போது இரத்த ஊநீரில் வைட்டமின் பி 12 (B12) அளவு மிகவும் குறைந்து இருக்கும். எதிர் அகக்காரணி எதிர் அங்கங்கள் 50% இருக்கும்.

addisonism : அடிசோனிசம் : அடிசன் நோயை ஒத்த நிலை. உடல் எடை இழந்தநிலை மற்றும் நிறமி ஏற்றம் ஆகியவை துரையீரல் காச நோயுள்ள நோயாளியிடம் காணப்படும்.

addison's disease : அடிசன் நோய் (குருதிச் சோர்வு நோய்) தோல் கருமை நோய் : வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் ஒரு நோய். குண்டிக்காய்ச் சுரப்பியின் புறப்பகுதியில் கார்ட்டிசால், ஆல்டோஸ்டெரோன் என்னும் சுரப்புப் பொருள் குறைவாகச் சுரப்பதால் இது உண்டாகிறது. இதனால், இரத்த அழுத்தம் குறைதல், எடைக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, தசை நலிவு, இரைப்பை-குடல் கோளாறுகள், தோல் ஊதா நிறமாக மாறுதல் போன்ற கோளாறுகள் உண்டாகின்றன.

addition : சேர்த்தல்; கூடுதல்.

addition compound : கூடுதல் சேர்மம்.

addition reaction : கூட்டுச் செயல்.

adducent : அணைவு; ஒடுக்கம்.

adduct : ஒடுக்கு; அட்க்கு : உடலின் மையப்பகுதியை நோக்கி இழுத்தல். உள் இழுத்தல்.

adduction : தசை மையச் சுரிப்பு; தசை மைய ஒடுக்கம்; அகப் பெயர்ச்சி : உடலின் தசை நார்கள் உடலின் மையம் நோக்கி இழுத்தல்.

adductor : மையச் சுரிப்புத் தசைநார் : உடல் உறுப்பு எதனையும் உடலின் மைய அச்சினை நோக்கி இழுக்கும் இயல்புடைய தசைநார்.

adductor brevis : குறு ஒடுக்கி.