பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

micronucleus

689

microscopy


micronucleus : நுண் கருமையம் : 1. ஒரு பெரிய உயிரணுவிலுள்ள சிறிய கருமையம். 2. இழை உறுப்புகளிலுள்ள இரண்டு கருமையங்களில் சிறியது.

micronutrients : நுண்சத்துப் பொருள்கள் : நுண்ணுயிர் சத்துப் பொருள்கள்.

microorganism : நுண்ம உயிரினம்; நுண்ணுயிரி; நுண்ணுறுப்பி : நுண்ணோக்காடியில் பார்த்தால் மட்டுமே கண்ணுக்குப் புலனாகக்கூடிய நுண்ணிய உயிர்கள். பொதுவாக நுண்ணிய நோய்க்கிருமிகளை இது குறிக் கும். எனினும் ஒரணு உயிர் (புரோட்டோசோவா), பூஞ்சாண ஆல்கா, மரப்பாசி போன்றவையும் இதில் அடங்கும்.

micropathology : நுண் நோயியல் : நோயின்போது திசுக்களிலும் உறுப்புகளிலும் ஏற்படும் மாறுதல்களை நுண்ணாய்வு செய்தல்.

microphone : ஒலிப்பெருக்கி : நுண்ணொலிகளைத் திட்டப் படுத்தியும், ஒலிகளை மின்னலைகளாக்கியும் தொலைபேசி ஒலிபெருக்கிகளைச் செயற் படுத்தும் கருவி.

micropinocytosis : நுண்திசுப் பாய்மக் கொப்புளம் : நுண்மூலக் கூறுகளின் உயிரணுவின் குருதி நீர்ச்சவ்வின் உள்முக மடிப்பு மூலமாக உள்ளிழுத்து, பின் கிள்ளியெடுக்கப்படுவதன் பேரில் திசுப்பாய்மத்தில் சிறிய நீர்க் கொப்புளங்கள் உண்டாதல்.

microprocessor : நுண் செய்முறைப்படுத்தி : ஒர் ஒருங் கிணைக்கப்பட்ட மின் சுற்று வழிச் சிம்பில் அடங்கியுள்ளவற்றைப் பொதுவாகச் செய்முறைப்படுத்துவதற்குத் தேவையான அடிப்படைக் கணிதத் தருக்க முறையும், கட்டுப் பாட்டு மின்வாயும் அடங்கிய வன்பொருள் அமைப்பான்.

microradiography : நுண் ஊடு கதிர்ப்படமெடுப்பி : நுண்ணிய பொருள்களை ஊடுகதிர்ப் படமெடுக்கும் முறை.

microrespirometer : நுண் அளவுமானி : தனித்து உள்ள திசுக்களின் சிறிய துகள்கள் மூலம் ஆக்சிஜனைப் பயன்படுத்தி அளவிடும் சாதனம்.

microscope : நுண்ணோக்காடி / பூதக்கண்ணாடி; நுண்பெருக்காடி : வெறும் கண்ணால் பார்க்க முடியாத ஒரு பொருளின் உருக்காட்சியைப் பெரிதாக்கிக் காட்டும் ஒரு சாதனம்.

microscopic : மிக நுட்பமான; நுண்ணிய; நுண்ணோக்கிய : நுண்ணோக்காடியின்றிப் புலப்படாத மிக நுண்ணிய.

microscopy : நுண்ணோக்காடிப் பயனிடு : நுண்ணோக்காடியை பயன்படுத்தி நுண்ணிய பொருள்களை ஆய்வு செய்தல்.