பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

microsome

migraine


microsome : நுண்திசுப்பாய்மம் : கொழுப்புப் புரதம் அதிகமாக உள்ள திசுப்பாய்மப் பொருள்களின்-முக்கியமாக நுண்புரதங்களின்-மிக நுண்ணிய துகள்.

microsporum : நுண் ஒட்டுண்ணி : மனிதர் மற்றும் விலங்குகளின் திசுக்களிலுள்ள கெராட்டினில் பூஞ்சான ஒட்டுண்ணி இனம்.

microsurgery : நுண்ணோக்காடி அறுவை மருத்துவம்; நுண் அறுவை : அறுவை மருத்துவத்தின் போது இருகண் நுண்ணோக்காடிகளைப் பயன் படுத்தி அறுவை மருத்துவம் செய்தல், திசுக்களைப் பெரிது படுத்திக் காட்டுவதால் நுண்ணிய அறுவை சாத்தியமாகிறது.

microsyriage : நுண்பீற்று மருந்தூசி : திரவத்தின் மிக நுண்ணிய அளவுகளைத் துல்லியமாக உடலில் செலுத்துவதற்கு உதவும் அடித்தோல் சார்ந்த பீற்று மருந்து ஊசி.

microvascular surgery : நுண் குருதிநாள அறுவை : இரு கண் நுண்ணோக்காடியைப் பயன்படுத்தி இரத்த நாளங்களில் அறுவை மருத்துவம் செய்தல்.

micturition : மிகை சிறுநீர் கழிவு; சிறுநீர் பெய்தல்; சிறுநீர்ப்போக்கு : அடிக்கடி சிறுநீர்க் கழிக்க விரும்பும் கோளாறு.

micturition, painful : நீர்ச்சுருக்கு.

midbrain : நடுமூளை : மூளைத் தண்டின் மேற்பகுதிக் கூறு. இதில் ஒரு சிறிய வளைவு மேடு, காப்புச் செதிள், மூளைத் தண்டுகள் அடங்கியிருக்கும்.

midgut : நடுக்குடல்.

midpalmar space : நடு உள்ளங்கை இடைவெளி : வசிநரம்புத் தசை நாண்களுக்கு ஆழமாகவும், மூன்று மத்திய உள்ளங்கை எலும்புகளுக்கு மேலாகவும், எலும்புகளுக்குக் குறுக்கு வெட்டாகவும் அமைந்துள்ள ஒர் ஆழமான இடைவெளி. இது மூன்றாவது உள்ளங்கை எலும்புடன் இணைந்துள்ள இடைச் சுவரிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

midriff : உந்துசவ்வு (உதரவிதா னம்) : நெஞ்கமேல் வயிறிடைப் பட்ட சவ்வு. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு.

midwife : மருத்துவச்சி; தாதி : பேறுகால மருத்துவ உதவித் தொழில் புரியும் பணிமகள்.

midwifery ; பேறுகால மருத்துவ உதவி : பேறுகாலத்தில் மருத்துவ உதவிபுரியும் அறிவியல்.

migraine : ஒற்றைத் தலைவலி; ஒரு பக்கத் தலைவலி : அடிக்கடி உண்டாகும் கடுமையான ஒற்றைத் தலைவலி, இத்துடன், வாந்தியும், பார் வைக் கோளாறும் ஏற்படலாம்.