பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Millard-Gubler syndrome

692

Minamata disease


Millard-Gubler syndrome : மில்லார்ட்-குப்லர் நோய் : கிடைமட்ட மலக்குடல் முடக்கு வாதம், மூளை இணைப்பில் ஏற்படும் நைவுப் புண் காரணமாக இது கீழ் இயக்கமுக நரம்பு முடக்குவாதம், எதிர் கிடைமட்ட பிரமிடுக்குழாய்க் குறிகள் ஆகியவற்றுடன் சேர்ந்து அல்லது சேராமல் உண்டாகும். ஃபிரெஞ்ச மருத்துவ அறிஞர்கள் அகஸ்டே மில்லார்ட், அடால்ஃப்ருலர் ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது.

Miller-Abbott tube : மில்லர்-அபாட் குழாய் : உயிரணுச் சுவருக்குள் உள்ள இடைவெளியில் உள்ள நீண்ட இரட்டைக் குழாய். இது, சிறிய மலக்குடலில் உட்செருகலுக்கான குமிழ் முனையைக் கொண்டிருக்கும். அமெரிக்க மருத்துவ அறிஞர்கள் சிரையர் மில்லர், வில்லியம் அபாட் ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது.

millo phylline : மில்லோஃபிலின் : மூச்சுக் குழாயை விரிவடையச் செய்யும் அதினோஃபைலின் போன்ற மருந்து.

Miltherex : மில்தெரக்ஸ் : காசநோய் சளியைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்குப் பயன்படும் குளோரின் தயாரிப்பின் வணிகப்பெயர்.

Milton : மில்ட்டன் : சோடியம் ஹைப்பர் குளோரைட்டின் நிலைபடுத்திய ஒரு கரைசல். இதன் 25%-5% கரைசல் காயங்களைக் கழுவப் பயன்படுகிறது. 1% கரைசல் குழந்தைகளையும், பால் புட்டிகளையும் நோய் நுண்மம் நீக்கப் பயன்படுகிறது.

Millwaukee brace : முதுகெலும்பி அணைவரிக்கட்டை : முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவினைச் சீராக்குவதற்கான சிகிச்சையின் போது உடலில் அணியப்படும் அணைவரிக் கட்டை.

mimesis : போலிசெய் இயக்கம் : 1. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் எளிமையான போலச் செய்யும் இயக்க நடவடிக்கை 2. ஒர் உறுப்பு நோயின் இசிப்பு தூண்டல்,

Minadex : மினாடெக்ஸ் : நோய் நீங்கி நலம் பெறும் போது கொடுக்கப்படும் சத்து மருந்தின் வணிகப் பெயர்.

mind : மனம்; உள்ளம் : 1. உணர்வு நிலை, நினைவாற்றல், பகுத் தறிவு ஆகியவற்றின் உறுப்பு அல்லது இருப்பிடம், 2. உள்ளத்தின் செயல்முறைகள், உளவியல் நடவடிக்கைகள் அனைத்தும்.

mineral : கனிமம்; கனிம : இயற்கையில் காணப்படும் உலோகம் போன்ற ஒரு பொருள். பல கனிமப் பொருள்கள், மனிதருக்கும், விலங்ககளுக்கும் ஊட்டச்சத்துக்கு இன்றியமையாதவை.

Minamata disease : மினாமாட்டா நோய் : ஜப்பான் விரி