பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mittelschmerz

695

Mogadon


செலுத்தி இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. ஜப்பானிய மருத்துவ அறிஞர் ஜே. மிட்கடா பெயரால் அழைக்கப் படுகிறது.

mittelschmerz : அடிவயிற்று வலி : கருவுறும் காலத்தில் மாத விடாய் நாட்களுக்கிடையில் அடிவயிற்றில் ஏற்படும் வலி, இது அண்டத்திலிருந்து கருவணு வெளிவரும் போது நிகழ்கிறது.

Mixogen : மிக்சோஜென் : இறுதி மாதவிடாய்க்குப் பின் ஏற்படும் கோளாறுகளுக்குப் பயன்படுத் தப்படும் ஆன்ட்ரோஜன் ஊஸ்டிரோஜன் கலவை மருந்தின் வணிகப் பெயர்.

mixture : கலவை : 1 கரையாத மருந்தைக் கொண்டிருக்கும் ஒரு திரவத் தயாரிப்பு. 2 ஒரு வேதியியல் இணைப்பு இல்லாமல், இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பொருள்களை ஒன்றாக இணைத்தல். இதில் ஒவ்வொரு பொருளும் தனது இயற்பியல் பண்புகளை அப்படியே வைத்திருக்கும்.

mobile : இயங்கும்; நடமாடும்.

mobile, clinic : நடமாடும் மருத்துவ மனை; இயங்கும் மருத்துவமனை.

modality : முறைமை : 1. நடை முறையின் ஒழுங்கு முறை. 2. குணப்படுத்தும் மருத்துவ இடையீட்டின் வடிவம். 3. புலனுணர்வின் பல்வேறு வடிவங்கள்.

modarator : நடுவர்; சீராளர்.

modecate : மோடிக்கேட் : ஃபுளு ஃபெனாசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

moditen : மோடிட்டென் : ஃபுளு ஃபெனாசின் என்ற மருந்து.

modification : மாற்றமைவு : ஒரு பொருளின் வடிவத்தை அல்லது பண்பியல்புகளை மாற்றுவதற்கான செயல்முறை.

modifier : உருமாற்று பொருள் : ஒரு பொருளின் வடிவத்தை அல்லது பண்புகளை மாற்றுகிற ஒரு பொருள்; அல்லது உயிரியல் துலங்கலை உண்டாக்கும் பொருள்; உடலில் உற்பத்தியாகும் இன்டர்ஃபெரான் எனப்படும் இடையீட்டுப் பொருள் போன்ற ஒரு பொருள். நோய்த் தடைக் காப்பு முறையைத் தூண்டிவிடக்கூடும்.

modulation : ஒழுங்கு முறையாக்கம் : ஒரு குறிப்பிட்ட மரபணு படியெடுக்கப்படும் வேக வீதத்தைக் கட்டுப்படுத்தும் விதி முறை.

Moduretic : மோடுரெட்டிக் : அமிலோரைட் ஹைடிரோ குளோ ரித்தியாசிட் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர்.

Mogadon : மோகடான் : னைட்ராஸ்பாம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.