பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

monobasic

697

mononuclear


நாடித்துடிப்பு, முச்சோட்டம், இரத்த அழுத்தம் போன்றவற்றைத் தானாகவே அளவிட்டுப் பதிவுசெய்யும் கருவி.

monobasic : ஓரணு அமிலம் : பதிலீடு செய்யக்கூடிய ஒரு ஹைடிரஜன் அணு உடைய ஒர் அமிலம்.

monoblast : முதிரா ஒற்றை உயிரணு : ஒற்றை உயிரணுவாக உருவாகக்கூடிய ஒரு முதிரா உயிரணு.

monoblepsia : ஒற்றைக் கண் பார்வை : ஒரு கண் பயன் படுத்தப்படும்போது பார்வை அதிகத் துல்லியமாகத் தெரியக் கூடிய ஒரு நிலை.

monochromatic : ஒற்றை வண்ணம் சார்ந்த : 1. ஒரேயொரு வண்ணம் மட்டுமே உடைய, 2.ஒரே சமயத்தில் ஒரு சாயத்தால் கறை உண்டாக்குதல்.

monochromatism : ஒற்றை நிறப்பார்வை : 1. ஒரேயொரு வண்ணம் தெரியக்கூடிய பார்வை. 2. முழுமையான நிறக் குருடு.

monochromatophil : நிறமேற்பியணு : 1. ஒரேயொரு நிறத்தை மட்டுமே ஏற்கக்கூடிய உயிரணு, 2. ஒரேயொரு நிறத்தினால் மட்டுமே நிறங்கொடுத்தல்.

monogenesis : தனி உயிர்மமூலம்.

monocyte : ஒற்றைக்கரு உயிரணு; ஒற்றை உயிரணு; ஒற்றைக் கரு :ஒற்றை உட்கருவுள்ள உயிரணு.

monocytosis : ஒற்றை உயிரணுப் பெருக்கம் : குருதியில் ஒற்றை உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருத்தல். இது கடுமையான நோய்களின்போதும், ஒற்றை உயிரணுப் பெருக்கத்தின்போதும், குரோன் நோயின் போதும் காணப்படும்.

monodermoma : ஒற்றை நுண்ணுயிரித் திசுக்கட்டி : ஒற்றை நுண்ணுயிரிப் படுகைத் திசுக்களைக் கொண்ட கட்டி.

monomania : ஒற்றைக் கருத்து வெறி; ஒரு பொருள் வெறி.

monomeric : தனிமரபணு நோய் : 1. தனியொரு உறுப்பினைக் கொண்ட அல்லது பாதிக்கிற, 2. தனியொரு நிலையிடத்தில் மரபணுகையில் கட்டுப்படுத் தப்படும் ஒரு பரம்பரை நோய் அல்லது பண்பு.

monomolecular : ஒற்றை மூலக்கூறு சார்ந்த : தனியொரு மூலக் கூறு உடைய.

mononuclear : ஒற்றை கண் சார்ந்த; ஒரு கண்ணுக்குரிய; ஒற்றைக் கண்ணாடி : 1. ஒரு கண் மட்டும் தொடர்பான; அல்லது சார்ந்த 2 நுண்ணோக்காடியில் உள்ளது போன்று ஒரு கண்ணாடி மட்டுமே கொண்ட