பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adductor longus

69

adenocarcinoma


adductor longus : நீள் ஒடுக்கி.

adductor magnus : பெரு ஒடுக்கி.

adductor muscle : மைய இழுப்புத் தசை : முன்னிழுக்கும் இயல்புடைய தசைநார் கையை உடலை நோக்கிக் கொண்டு வருவது இந்தத் தசைதான்.

adelomorphous : வரையறுத்த உருவின்மை :ஒரு வரையறுக்கப்பட்ட முறையில் உருவம் இல்லாத நிலைமை.

adenalgia : சுரப்பிவலி : உடலில் உள்ள சுரப்பியில் தோன்றும் வலி.

adendritic : நரம்பணுயிழையற்ற.

adenectomy : மருத்துவ நிண நீர் கணு நீக்கம்; சுரப்பி நீக்கம் : ஒரு சுரப்பியை அறுவை மருத்துவம் செய்து அகற்றுதல்.

adenectopia : நிலைபிறழ்ந்த சுரப்பி.

adenectopic : இடம்மாறிய சுரப்பி; நிலை பிறழ்ந்த சுரப்பி : ஒரு சுரப்பியானது உடலில் இயல்பாக இருக்க வேண்டிய இடத்தில் அல்லாது வேறு எங்காவது இருப்பது.

adenemphraxis : சுரப்பி நீர் ஓட்டத் தடை : சுரப்பியில் சுரக்கும் சுரப்பு நீர் செல்லும் பாதையில் தடை ஏற்படுதல்.

adenitis : சுரப்பி அழற்சி; கழலை வீக்கம்.

adenia : நீடித்த நிணநீர்ச் சுரப்பிப் பெருக்கம் : ஒரு நிணநீர்ச் சுரப்பியானது நெடுங்காலமாக வீக்கமடைந்த நிலையில் இருத்தல்.

adenitis : சுரப்பி அழற்சி : ஒரு சுரப்பியல் அல்லது நிணநீர்க் கரணையில் ஏற்படும் வீக்கம். மூச்சுக் குழாய் நிணநீர்க் கரணைகளில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி.

adenization : சுரப்பி போன்ற மாறுதல் அடைதல்.

aden : இணைப்புச் சொல் : சுரப்பி சொல்லுடன் இணையும் சொல்.

adenoacanthoma : சுரப்பித் திசுப்புற்று :நன்கு வரையறுக்கப்பட்ட நிலையில் காணப்படும் ஒரு வகைச் சுரப்பித் திசுப்புற்று. இது உடலில் பல் வேறு இடங்களில் பரவும் தன்மையுடையது.

adenoameloblastoma : முதுகெலும்பில் உண்டாகும் புற்றுக் கழலை. தீங்கிலா வகைப் புற்று. இதன் நாளங்களில் கனகரமான அணுக்கள் காணப்படும்.

adenoblast : சுரப்பியணு : கருவில் காணப்படும் ஒரு வகை அணு, வளர்ச்சியில் இது ஒரு சுரப்பித் திசுவாக உருமாறக் கூடியது.

adenocarcinoma : சுரப்பிப் புற்று; சுரப்பித் திசுப் புற்று : சுரப்பித்