பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mosaicism

700

mottling


mosaicism : முரண் மரபணு நோய் : மாறுபட்ட மரபணு அல்லது இனக்கீற்று அமைப்பின் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயிரணு வரிசைக் கொண்ட ஒரு வான் நிலைமை.

mosquitor : பெருங்கொசு; நுளம்பு : குலிசிடேயி குடும்பத்தைச் சேர்ந்த உறிஞ்சும் இரட்டைச் சிறகுகளையுடைய பூச்சி, இதில் ஏடேஸ், ஆனோஃபெ லஸ், குலக்ஸ், ஹேமோகோகஸ் ஆகியவை அடங்கும். இவை, மலேரியா, யானைக்கால் நோய், மூட்டு வலிக் காய்ச்சல் (டெங்கு), மஞ்சள் காய்ச்சல், கிருமியால் பரவும் மூளைக் காய்ச்சல் போன்ற பல நோய்களின் கடந்திகளாகச் செயற்படுகின்றன.

mosquito transmitted haemor rhagic fevers : குருதிப் போக்குக் காய்ச்சல் : வெப்ப மண்டலப் பருவ நிலையில் முக்கியமாக ஏற்படும் தொற்றுக் காய்ச்சல் வகைகள். இவற்றினால் முக்கியமாக முட்டுத் தசைகளிலும், தோலிலும் இரத்தப் போக்கு உண்டாகும். இவை கொசுவினால் பரவுகிறது. மஞ்சள் காய்ச்சல் இவ்வகையைச் சேர்ந்தது.

motion : மலங்கழிதல் : இரைப் பையிலிருந்து மலம் வெளியேறுதல்.

motion sickness : அசைவு நோய் : ஒருவருக்குப் பழக்க மில்லாத உண்மையான அல்லது மேலீடான அசைவுக்குத் துலங்கலாக உண்டாகும் மருத்துவ அறிகுறி. குமட்டல், வெளிறிய தோற்றம், வியர்வை, வாந்தி ஆகியவற்றுடன் சேர்ந்து ஏற்படும்.

mother : தாய்; அன்னை.

mother, expectant : பிள்ளைத் தாய்.

mother, lactating : ஊட்டு தாய்.

motile : இயங்கவல்ல.

motility : அசைவியக்கம்.

motoneuron : இயக்கு நரம்பு :தசைகள் சுருங்குவதைத் தூண்டுவதற்கான தூண்டல்களைத் தசைகளுக்கும், சுரப்பிகளில் சுரப்பி நீர் சுரப்பதைத் தூண்டு வதற்கான தூண்டல்களைச் சுரப்பிகளுக்கும் கொண்டு செல்லும் நரம்பு.

motor : இயக்கம் : 1. அசைவிளை உண்டாக்குதல், 2. தூண் டல்களை உண்டாக்கிப் பரப்புகிற நரம்பு அமைவு.

motor nerve : கட்டளை நரம்பு; இயக்கு நரம்பு : தசை இயக்கத்தை தூண்டுகிற நரம்பு மண்டலம்.

mottling : வண்ணப்புண் : 1. பல் வேறு வண்ணங்கள் கொண்டு உள்ள மறுக்களுடன் நைவுப்