பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mucus membrane

702

murmur


mucus membrane : சளிச்சவ்வு.

multifactorial diseases : பன் முகக்காணி நோய்கள் : பல்வேறு நிலையிடங்களைக் கொண்ட பன்முக மரபணுக்கள் உடைய சுற்றுச் சூழல் காரணிகளின் குறுக்கீடு காரணமாக உண்டாகும் நோய்கள்.

multicellular : பல உயிரணுக்களுடைய : பல உயிரணுக்களினால் அமைந்த.

multigravida : பல குழந்தை பேறு; பல் சூலி; பல பேற்றுத் தாய்; தொடர் பேற்றுத் தாய்.

multiinfection : பன்முகக் கலவை நோய் : ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட நோயனுக்கள் வளரும் கலவை நோய்.

multilobular : பலமடல்; பன்மடல் : பல காதுமடல்களைக் கொண் டிருத்தல், பல்லிதழ்.

multipara : பல்மகவுத் தாய்.

multipuncture test : பன்முகத் துளைச் சோதனை : குறுகிய நிலையான எஃகு ஊசிகள் பொருத்தப்பட்ட சிறிய தட்டினைக் கொண்டிருக்கும் ஒரு சாதனத்தைக் கொண்டு செய்யப்படும் காச நோய்க் கிருமிச் சோதனை. ஒரு சுருள் கம்பியை விடுவித்தவுடன் 6 ஊசிகளும் தோலில் 2 மி.மீ. ஆழத்துக்கு துளையிடுகின்றன.

multivite : பல உயிர்ச் சத்து மாத்திரை : வைட்டமின் 'ஏ', அனு. ரின், ஹைட்ரோகுளோரைடு, அஸ்கார்பிக் அமிலம், கால்சி ஃபெரால் போன்ற பல உயிர்ச் சத்துகள் அடங்கிய மாத்திரைகள்.

mummification : சடலப் பதனீடு : 1. உடல் மரத்துப் போதல் 2. மரத்துப் போன முதிர் கருவாக உடலை உலர்த்திச் சுருக்குதல்.

mumps : புட்டாளம்மை; பொன்னுக்கு வீங்கி : காதின் முன்புறச் கரப்பியையும் வாய் உட்புறத்தையும் இணைக்கும் சுரப்பி நாளங்களில் ஏற்படும் வீக்கம் வைரஸ் நுண்கிருமிகளால் ஏற்படுவதாகும்.

munchausen syndrome : பொய் புகலும் நோய் : தேவையின்றி மருத்துவ சோதனைகள், அறுவைச் சிகிச்சைகள், சிகிச்சைகள் செய்துகொள்வதற்காக நோயாளிகள் அடிக்கடிப் பொய்க் காரணங்களைக் கூறுதல் (எ.டு) குழந்தையைப் பற்றித் தாய் பொய் கூறுதல்.

mural : நாள உட்சுவர் சார்ந்த; சுவரிய; சுவர் மேல் : உட்குழிவான உறுப்பு அல்லது நாளத்தின் சுவர் பற்றிய.

murmur : முறுமுறுப்பு; முணு முனுப்பு : இதயத்தின் அல்லது பெருந் தமனிகளின் அசைவினைக் கேட்கும்போது கேட்கும் மெல்லியமான ஒலி, அசை வொலி.