பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

murmur,cardiac

703

mutation


murmur, cardiac : இதயமுணுப்பு.

musca : வீட்டு ஈ : சாதாரண வீட்டு ஈ இனம். இது தமனி நோய்கள் பலவற்றைப் பரப்புகிறது.

muscarinic : பித்தப்பை நச்சு : பித்தப்பையில் காணப்படும் கோலின் என்ற நச்சுப் பொருளின் விளைவுகள் தொடர்புடைய.

muscle : தசை; தசைநார் : உடலின் அசைவுக்கு உதவுகிற, வலுவான கருங்கி விரியக்கூடிய தசை நெஞ்சுப்பையின் மையத் தசை தானாகவே இயங்கக் கூடியது; இதனை மைய நரம்பு மண்டலம் இயக்குகிறது.

muscular : தசைநார் குறித்த.

muscular dystrophies : தசை மெலிவு : மரபு வழி உண்டாகும் நோய் வகைகளில் ஒன்று. இதனால் தசைகள் படிப்படியாக நலிந்து, ஊனமடைந்து, திரிபடைகின்றன. குழவிப் பருவத்தில் இது ஏற்படுகிறது.

musculature : தசைமண்டலம்; தசையம் : உடலின் தசைமண்டலத்தின் கட்டமைப்பு.

mushroom worker's lung : காளான் தொழிலாளர் நுரையீரல் : காளான் சிதைவினை உட் சுவாசிப்பதால் உண்டாகும் ஒவ்வாமை நுரையீரல் கண்ணுறை வீக்கம்.

mustard : கடுகு : கடுகுச் செடியின் விதை. இது வாந்தியுண் டாக்குவதற்கு வாய்வழியாகக் கொடுக்கப்படுகிறது. எரிச்சலைப் போக்க தைலமாகப் பூசப்படுகிறது.

mustine : மஸ்டின் : நைட்ரஜன் மஸ்டார்ட்.

mutagen : முட்டாஜென் : மரபணுத் திரிபைத் தூண்டக்கூடிய ஒரு மருந்து.

mutagenesis : வகை மாற்றுத் தூண்டல் : மாறுதலடைந்து புது உயிரினம் தோன்றுவதைத் தூண்டுதல்.

mutagenicity : வகைமாற்றத் திறன் : மரபணு மாற்றத்தை உண்டாக்கும் திறன்.

mutant : வகைமாற்ற உயிரணு : மரபணு மாற்றத்தை அல்லது மாறுதலடைந்து புது உயிரினம் தோன்றுவதைத் தூண்டுகிற உயிரணு,

mutase : நிலைமாற்ற ஊக்கி : ஒரு வேதியியல் குழுமத்தை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மூலக்கூறின் உள்ளேயே இடமாற்றம் செய்வதை ஊக்கு விக்கிற ஒரு செரிமானப் பொருள்.

mutation : வகைமாற்றம்; திசு மரபுப் பிறழ்வு; மாறுபாடு; மரபுச் சிதைவு : ஒரு வாழும் உயிரணுவின் மரபணுக்கள் அல்லது இணக்கீற்றுகள் மாறுதலடைந்து புது உயிரினம் தோன்றுதல். அயனியக் கதிரியக்கம், வகை