பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mute

704

mycoyplasma


மாற்ற வேதியியல் பொருட்கள், புறவூதாக் கதிரியக்கம் போன்றவை வகைமாற்றத்தைத் தூண்டக்கூடும்.

mute : ஊமை : வாய்பேச முடியாதிருத்தல் வாய்பே முடியாதிருப்பவர்.

mutilation : உறுப்புச் சிதைவு : உடல் உறுப்பினை வெட்டிக் குறைத்தல்; முடமாக்குதல்; உருவைத் கெடுத்தல்; உருச்சிதைவு செய்தல்; உறுப்பைப் பயனற்றதாக்குதல்.

mutism : ஊமைத் தன்மை; மொழியற்ற நிலை : வாய்பேச இயலாதிருத்தல் அல்லது வேண்டுமென்றே வாய்பேசாதிருத்தல். இது பிறவியிலே இருக்கலாம். பெரும்பாலும் காதுகேளாமை (செவிடு) காரணமாக ஊமைத் தன்மை ஏற்படுகிறது.

myalgia : தசை நோவு; தசை வலி : தசையில் உண்டாகும் கீல் வாத நோய்.

Myambutol : மியாம்புட்டால் : எத்தாம்புட்டால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

myasthenia : இயக்கு தசை நலிவு : தசைவலுக்குறை, தசைப் பலவீனம்.

myasthenic crisis : சுவாச தசை நலிவு : தசை நலிவு கடுமையாவ தன் காரணமாக மூச்சோட்டத் தசைகள் திடீரென நலிவடைதல்.

Mycardol : மைக்கார்டால் : பெண்டாஎரித்திரிட்டில் டெட்ரா நைட்ரேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

mycelium : பூசணவலை : பூஞ்சைக் காளானின் வெண்மையான நாரியல் பொருள்.

mycetoma : பூஞ்சண நோய்; பூசணத் தடிப்பு : காலில் அல்லது கையில் கடற்பஞ்சு போன்று தோன்றும் நோய் வகை.

mycifradin : மைசிஃப்ராடின் : நியோமைசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

mycobacterium : நீளுருளைப் பாக்டீரியா : அமிலத்தை எதிர்க் கக்கூடிய நீள் உருளை வடிவிலான பாக்டீரியா வகை.

mycologist : காளானிலறிஞர்; பூசணவியல் வல்லுநர் : பூஞ்சைக் காளான் பற்றிய ஆய்வறிஞர்.

mycology : காளானியல்; பூசணவியல் : பூஞ்சைக் காளான் பற்றி ஆராயும் அறிவியல்.

mycomyringitis : செவிப்பறை நைவுப்புண் : செவிப்பறைச் சவ்வில் ஏற்படும் பூஞ்சாண நோய்.

mycoyplasma : நுண்ணுயிரி : சுதந்திரமாக வாழும் மிக நுண்ணிய உயிரிகள் எனக் கருதப்படும் மிகச் சிறிய உயிரி இனம். இவற்றுள் சில ஒட்டுண்ணி