பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

myoascial

708

myometritis


myofascial : திசுப்பட்டை சார்ந்த : தசைத் திசுவைச் சூழ்ந்திருக்கும் தசைப்பட்டை தொடர்புடைய.

myofibril : இதய நுண்ணிழை : மண்டையோட்டின் அல்லது இதயத்தசை இழைமத்தில் ஏற்படும் மென்மையான நீளவாக்கிலான நுண்ணிழை.

myofibroblast : நுண்ணிழைக் குருணை : குணமாகி வரும் காயங்கள் சுருங்குவதற்கு உதவுகிற சுருங்கத்தக்க துண்ணிழைக் குருணை.

myofibroma : இழைம திசுக் கட்டி : இழைம இணைப்புத் திகவும், தசை உயிரணுக்களும் அடங்கிய உக்கிரமல்லாத கட்டி.

myofibrosis : மிகை இணைப்புத் திசு : தசையில் அளவுக்கு மீறியுள்ள இணைப்புத் திசுக்கள்.

myofibrositis : இழைம உறை வீக்கம் : தசை இழைமங்களை முடியிருக்கும் இழைம உறையின் வீக்கம்.

myofilament : வரித்திசை நுண்ணிழை : வரித்தசைகளில் உள்ள நுண்ணிழைகளை உருவாக்குகிற அதி நுண்ணிய, கனமான, மெல்லிய இழைகள்.

myogenic : தசை சார்ந்த : தசையிலிருந்து தோன்றுகிற அல்லது தொடங்குகிற.

myoglobin : ஒற்றைக் குளோபின் குருதி : தசையிலுள்ள குருதிச் சிவப்பணு நிறமி, ஒரு குளோபின் அலகில் நான்கு குருதிச் சிவப்பணுக்களுக்குப் பதிலாக ஒரு குருதிச் சிவப்பணுவைக் கொண்டிருத்தல்.

myoglobulin : தசைத்திசுப் புரதம் : தசைத்திசுவில் காணப்படும் தசைப்புரதம்.

myograph : தசைச்சுருக்கப் படியெடுப்பான் : தசைச் சுருக்கங்களின் படிகளை எடுக்கும் ஒரு கருவி.

myohaemoglobin : தசைப்புரதம் : செந்நிறக் குருதியணு வண்ணப் பொருளை ஒத்த ஒருவகை தசைப்புரதம் இது குருதியணு வண்ணப் பொருளை விடக் குறைந்த ஆக்சிஜனுடன் இணைந்து ஆற்றலை உண்டாக்குகிறது.

myokymia : தசைச்சுரிப்பு; தசைத் துடிப்பு : கீழ்க்கண்ணிமையில் தசை இழுத்துக்கொள்ளுதல். கண் இழைமக் காழ்ப்புக் கோளாறுடைய நோயாளிகளுக்கு இது ஏற்படுகிறது.

myology : தசையியல் : தசைகள் அவற்றின் பகுதிகள் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு.

myomectomy : தசையெடுப்பு.

myometritis : கருப்பை சுவர் வீக்கம் : கருப்பைத் தசைச்சுவர் வீக்கம்.