பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adenocoele

70

adenoids


திசுக்களில் ஏற்படும் புற்று நோய். இதனை 'சுரப்பிப் பிளவை" என்றும் கூறுவர்.

adenocoele : சுரப்பு நீர்க்கட்டி : சுரப்பியிலிருந்து உருவாகும் நீர்க்கட்டி

adenocellulitis : சுரப்பித்திசு அழற்சி : ஒரு சுரப்பி அழற்சியுறல். சுரப்பி மற்றும் அதைச் சார்ந்த திசுக்கள் அழற்சி அடைதல்.

adenocyte : முதிர் சுரப்புத் திசு.

adenodynia : சுரப்பி வலி.

adenoepithelioma : சுரப்பிப் புறப் படலத்திசுக் கட்டி; சுரப்பிப் புறப்படலப் புற்றுக்கட்டி; சுரப்பிச் சீதப்படலப் புற்று : சுரப்பித் திசுக்களில் உள்ள சீதப்படல அணுக்களில் தோன்றும் புற்று நோய்க் கழலை.

adenofibroma : சுரப்பி நார்த்திசுப் புற்று : சுரப்பித் திசுக்களிலும் நார்த்திசுக்களிலும் உருவாகும் புற்றுக் கழலை.

adenofibrosis : சுரப்பிகள் ஏற்றம்.

adenogenous : சுரப்பித்திசு வளர்ச்சி : சுரப்புத் திசுவிலிருந்து வளருதல்.

adenography : சுரப்பி ஊடு கதிர்ப்படம் : சுரப்பியை ஊடு கதிர்ப்படம் எடுத்தல்.

adenohypersthenia : மிகைச் சுரப்பு.

adenohypophysis : கபச்சுரப்பி முன்மடல்; அடிமூளைச் சுரப்பி முன்மடல்.

adenohypophysectomy : கபச்சுரப்பி முன்மடல் அகற்றல்; அடிமுனைச் சுரப்பி முன்மடல் நீக்கம் : கபச்சுரப்பியின் முன் பக்கமடலை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் நீக்குதல்.

adenoidectomy : மூக்கடித் தசை அறுவை மருத்துவம் :முக்கடித் தசைத் திசுவின் அழற்சியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

adenoid : அடிநாய்டு சுரப்பி.

adenoiditis : மூக்கடித்தசை அழற்சி : மூக்கடித்தசை அழற்சியுறல்

adenoids : மூக்கடித் தசை வளர்ச்சி (மூக்கடியான் : மூக்கடித் தசையிலுள்ள நிணநீர்ச் சுரப்பித்


மூக்கடித் தசை வளர்ச்சி