பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

myope

709

myotube


myope : அணிமைப் பார்வை நோயர்.

myopathy : தசைவழு.

myoplasm : சுருங்கும் தசை உயிரணு : தசை உயிரணுவின் கருங்கத்தக்க பகுதி.

myoma : தசைக்கட்டி : தசைத் திசுக்களில் ஏற்படும் கட்டி.

myomalacia : தசைமென்மை; தசை மெலிவு : நெஞ்சுப்பையின் தசைப்பகுதியில் திசுமாள்வுக்குப் பிறகு ஏற்படுவது போன்று தசை மென்மை அடைதல்.

myometrium : கருப்பை உள்ளிடைச் சுவர்; கருப்பைத் திசுச் சுவர்; கருவகத்தசை : கருப்பையின் திண்ணிய தசைச் சுவர்.

myonerural : தசை நரம்பு சார்ந்த; தசை நரம்பியல் சார்ந்த.

myopathy : தசைநோய்; தசை நலிவு : தசைகளில் ஏற்படும் ஒரு நோய்.

myope : கிட்டப்பார்வை நோயாளி: அண்மைப் பார்வை கோளாறு உடையவர்.

myopia : கிட்டப்பார்வை; அண்மைப்பார்வை : அண்மைப் பார்வைக் கோளாறு. இதில் ஒளிக்கதிர்கள் கண்விழியின் பின்புறத் திரைக்கு முன்னால் குவிகின்றன.

myoplasty : தசையமைப்பு; தசை ஒட்டுறுப்பு அறுவை : தசைகளில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்தல்.

myosarcoma : தசை கழலை; தசைப் புற்று : தசையிலிருந்து எழும் உக்கிரமான கழலை.

myosin : மையோசின்; தசைப் புரதம் : தசை உயிரணுக்களைச் சுருங்கச் செய்யும் முக்கிய புரதங்களில் ஒன்று.

myosis : கண்பார்வை இடுக்கம்; பாவைச் சுருக்கமிகைப்பு.

myositis : தசையழற்சி.

myotome : தசைவெட்டு கருவி : 1. தசைகளை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கத்தி. 2 வரித் தசையை உண்டாக்கும் கரு முளையின் ஒரு தசைத் துண்டத்தின் பகுதி. 3. ஒரு தசைத் துண்டத்திலிருந்து உருவாகி ஒர் ஒற்றை முதுகுத்தண்டுக் கூறிலிருந்து நரம்பு வலுவூட்டப்பட்ட அனைத்துத் தசைகளும்.

myotomy : தசை வெட்டு : தசைத் திசுவை வெட்டியெடுத்தல் அல் லது கூறுபோடுதல்.

Myotonine : மையோட்டேனைன் : பெத்தனிக்கால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

mytonoid : தசைவினை : பொதுவான சுருக்கத்தையும், தளர்ச்சி யையும் காட்டும் ஒரு தசைவினை.

myotube : தசையிழைமக் குழாய் : ஒரு குழாயின் தோற்றமுடைய