பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

myringitis

710

myxoviruses


மண்டையோட்டு தசை இழை மம் வளர்தல்.

myringitis : தசைச் சவ்வு வீக்கம் : தசை நார்ச்சவ்வு வீக்கம்.

myringectomy : செவிச்சவ்வு அறுவை மருத்துவம் : இடைச் செவிச் சவ்வினை வெட்டி எடுத்தல்.

myringoplasty : தசை சவ்வு அறுவை : தசைநார்ச் சவ்வில் உள்ள கோளாறை நீக்குவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.

mysoline : மைசோலின் : பிரிமிடோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

mysophilia : கழிவுப் பொருள் நாட்டம் : கழிவுப் பொருள்களை நோக்கி அதிகமான நாட்டம்.

mysophobia : மாசுப்பொருள் அச்சம் : மாசுப்பொருள், கழிவு பொருள் பற்றிய பிணி உண்டாக்கும் அச்சவுணர்வு.

Mystecline F : மிஸ்டெக்ளின் F : டெட்ராக்சைளினும், ஒரு பூஞ் சனை எதிர்ப்புத் தூளும் கலந்த கலவையின் வணிகப் பெயர்.

myxoedema : மந்திப்புக் கோளாறு; மெலி வீக்கம் : கேடயச் சுரப்பிக் குலைவு காரணமாக உடல் உறுப்புகளின் அடிச்சவ்வுகள் தடித்து உடலும் உள்ளமும் உக்க அழிவு உண்டாக்கும் நோய்.

myxofibroma : முளைத்தசை திசுக்கட்டி : முதிர்ச்சி பெறாத நடு மூளைத்தசை அடங்கிய உக்கிரமல்லாத இணைப்புத் திசுக் கட்டி.

myxoma : ஊனீர்ப் புற்று : பெரும்பாலும் சவ்வுப் பொருள் அடங்கியுள்ள ஒர் இணைப்புத் திசுக்கழலை.

myxosarcoma : திசுக்கழலை : முதிர்ச்சியுறாத நடு மூளைத் தசையை ஒத்திருக்கிற திசு அடங்கிய கழலை.

myxoviruses : சளிக் காய்ச்சல் கிருமிகள் : கடும் நீர்க் கோப்புடன் கூடிய சளிக்காய்ச்சலை உண்டாக்கும் நோய்க் கிருமிகளின் தொகுதி.