பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

naphthalene

714

narcosis


மைக் கோளாறுகளிலும், மூக்கு அழற்சி அடைப்பு நீக்க மருந்து இதன் 1/2000 முதல் 1/1000 வரையிலான கரைசல் பீச்சுத் தூவல் மருந்தாக அல்லது சொட்டு மருந்தாகப் பயன்படுத் தப்படுகிறது.

naphthalene : இரச கற்பூரம் : சாம்பிராணி எண்ணெயிலிருந்து உருவாக்கிய ஒரு படிகம். அந்துருண்டைகளாகவும், பூச்சி கொல்லியாகவும் பயன்படுத்தப் படுகிறது.

naphthaline : நாப்தலின் : புகையிலைப் புகையில் காணப்படும் 'கார்னோ ஜீன்' எனப்படும் புற்றுத் தூண்டு பொருள்.

napkin rash : இடுப்புக் கச்சைத் தடிப்பு; அணையாடைக் கட்டி : குழந்தைகள் அணையாடையில் சிறுநீர் கழித்து, நவச்சார ஆவித் தன்மையுடன் ஆக்கச் சிதைவு எற்படுவதன் காரணமாக உண்டாகும் தோல் தடிப்பு நோய்.

Naprosyn : நாப்ரோசின் : ஃபெர்னாப்ராக்சான் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

naproxen : நாப்ரோக்சென் : இரைப்பை நீர்க்கசிவு ஏற்படாமல் வலியைக் குறைத்து, வீக்கத்தை நீக்கி, விறைப்பினைப் போக்கும் மருந்து

Narcan : நார்க்கான் : நாலெக்சோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

narcissism : தற்காதல் (தற்பூசனை) தன்னுடல் காதல் தன் காமம் தன் மீதே காதல் கொள்ளும் உளவியல் கோளாறு.

narcoanalysis : மயக்க நிலை ஆய்வு.

naris : நாசி : மூக்குத்துளை, முக்குக் குழியின் இருபுறமும் முக்கிலுள்ள முன்புறத் திறப்பு.

narcoanalysis : துயில் மயக்கப் பகுப்பாய்வு; போதை பிரித் தாய்வு; மயக்க நிலை ஆய்வு : இலேசான மயக்க மருந்து கொடுத்துத் துயில் நிலையில் இருக்கும்போது மனநிலையைப் பகுப்பாய்வு செய்தல்.

narcolepsy : துயில் மயக்க நோய்; கட்டுப்படா தூக்கம் : தவிர்க்க முடியாத திடீர்த் தூக்கக் கோளாறு பல்வேறு நோய் நிலைகளில் பகலில் அடிக்கடி உறங்கும் நிலை.

narcosis : மருந்து மயக்க நிலை; மருந்தால் நனவிழப்பு; போதை மயக்கம்; வெறி மயக்க நிலை; மயக்க நிலை : மருந்தூட்டுவதால் ஏற்படும் மயக்க நிலை; நோவுணர்ச்சியில்லா நிலை; மரமரப்பு மருந்துட்டிய நிலை உளவியல் கோளாறுகளின் போது மருந்துட்டி இந்த மயக்க நிலை வரவழைக்கப்படுகிறது.