பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

narcosynthesis

715

nasofrontal


narcosynthesis : மருந்து மயக்கப் பகுப்பாய்வு; போதை நினைவூட்டுச் சேர்க்கை : இலேசான மயக்க மருந்துட்டி துயில் மயக்கத்தை உண்டாக்கி நோயாளிகளின் நினைவிலிருந்து ஒரு நிகழ்ச்சி பற்றிய தெளிவான நினைவை வரவழைப்பதற்கான பகுப்பாய்வு முறை.

narcotic : துயிலுட்டும் பொருள்; சூழ்நிலை உறக்க ஊக்கி; போதை யூட்டி; மயக்கி : மயக்க மருந்து: நோவுணர்ச்சி நீக்கும் பொருள்; மரமரப்பூட்டும் மருந்து. இதனால் சுவாசத் தளர்ச்சி ஏற்படலாம். இதனைத் துயிலூட்டும் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி நீக்கி விடலாம்.

narcotism : மயக்க மருந்துப் பண்பு : மயக்க மருந்தின் செயலாற்றல் பண்பு.

Nardi : நார்டில் : ஃபெனல்சின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

nares : மூக்குத் துளைகள்; மூக்கு ஒட்டைகள்; நாசித்துளைகள் : மூக்கின் புறக்குழிவிலிருந்து உள்நோக்கிச் செல்லும் இரு துளைகள்.

Narphen : நார்ஃபென் : ஃபெனாசோசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

nasai : மூக்கு சார்ந்த; மூக்கின்; நாசிய : மூக்குக்கு உரிய மூக் கிடைத்தட்டு இணை எலும்பு.

nasal, bone : நாசி எலும்பு.

nasal, passages : நாசிப்பாதை.

nasal, septum : நாசிச்சுவர்.

nasalis : மூக்குத்தசை : மூக்கிலுள்ள மூன்று தசைகளில் ஒன்று. இது குறுக்குத்தசைப் பகுதி, சிறகுப்பகுதி எனப் பகுக்கப்பட்டுள்ளது.

nascent : முதிராநிலை : பிறக்கும் நிலையிலுள்ள பிறந்த நிலை யிலுள்ள.

nasion : மூக்கு முனை : 1. மண்டையோட்டிலுள்ள ஒரு புள்ளி. இது முக்கு நெற்றிப் பொருத்துவாயின் மையப் பகுதிக்கு நேரிணையாக இருக்கும். 2. மூக்கின் உச்சிப் பகுதியிலுள்ள பள்ளம்.

naso : மூக்கு சார்ந்த : மூக்கு தொடர்பான ஒர் இணைப்புச் சொல்.

nasoantral : மூக்கு-தாடைக் குழி : மூக்கு மற்றும் தாடைக் குழிப் பை சார்ந்த.

nasоendoscopy : மூக்கு அக நோக்கு ஆய்வு : கண்ணால் நேரடியாகப் பார்க்க இயலாத மூக்கின் பகுதிகளைப் பார்ப்பதற்கான வளையக்கூடிய அல்லது விறைப்பான அகநோக்குக் கருவியால் நோக்குதல்.

nasofrontal : முக்கு-நெற்றி எலும்பு சார்ந்த : முக்கு நெற்றி எலும்புகள் தொடர்புடைய.