பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nasogastric

716

natal


nasogastric : மூக்கு-இரைப்பை இணைப்பு : 1. மூக்கை உணவுக் குழாய் வழியாக இரைப்பை வரை இணைத்தல், 2. மூக்குஇரைப்பைக் குழாய் வழியாகத் திரவச் சத்துப் பொருள்களை இரைப்பைக்குள் செலுத்துதல்.

nasolabial : மூக்கு-மேலுதடு சார்ந்த; நாசி உதடு சார் : மூக்கு, மேலுதடு தொடர்புடைய.

nasolacrimal : மூக்கு கண்ணீர்ச் சரப்பி சார்ந்த; நாசி கண்ணீர் சார் : மூக்குக் குழிவு, கண்ணிர்ச் சுரப்பி தொடர்புடைய.

masolarcrimal-duct : நாசி கண்ணீர்ச் சுரப்பி நாளம்.

nasology : முக்கு நோயியல் : மூக்கு, அதில் உண்டாகும் நோய்கள் பற்றிய ஆய்வு.

nasomental reflex : மூக்குசார் அனிச்சை செயல் : மூக்கின் பக் கத்தைத் தட்டுவதன் மூலம் உண்டாகும் ஒர் அனிச்சை செயல். இதில் கீழுதடு உயர்ந்து, மன இயக்கத் தசை சுருங்கி, முகவாய்க்கட்டைத் தோலில் சுருக்கம் எற்படுதல்.

nasopharyngeal : மூக்குத் தொண்டை சார்ந்த : மூக்கு, மூக்குக் குழி, தொண்டை தொடர்பான.

nasopharyngitis : மூக்குத் தொண்டை அழற்சி : மூக்கிலும் அடித் தொண்டையிலும் ஏற்படும் வீக்கம்.

nasopharyngoscope : மூக்குத் தொண்டை உள்நோக்குக் கருவி : மூக்கு, தொண்டைப் பகுதிகளின் உட்புறத்தைப் பார்க்க உதவும் கருவி.

nasopharyngolary rigoscopy : குரல்வளை-தொண்டை ஆய்வு : குரல்வளை, குரல்வளை-தொண்டையை பார்த்து ஆராய்வதற்கும், நைவுப்புண்களைக் கண்டறிவதற்குமான கருவி.

nasopharynx : மூக்கடித் தொண்டை; மேல் தொண்டை : மென் மையான அண்ணத்திற்கு மேலேயுள்ள தொண்டையின் ஒரு பகுதி.

nasoscope : மூக்கு ஆய்வுக் கருவி : மூக்குக் குழிவை ஆய்வு செய்வதற்கான, மின் விசை மூலம் ஒளிரும் கருவி.

Nasse's law : நாசே விதி : X-தொடர்புடைய பாரம் பரியத்தைச் சுட்டும் விதி. இதன் படி, பெண்களினால் வரும் மன நிலையினால் ஆண்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இதனை ஜெர்மன் மருத்துவ அறிஞர் நாசே விவரித்துரைத்தார்.

nasosinusitis : மூக்கு உட்புழை அழற்சி : மூக்கிலும் அதை அடுத்துள்ள எலும்பு உட்புழைகளிலும் ஏற்படும் வீக்கம்.

natal : பிறப்பு சார்ந்த : பிறப்பு தொடர்பான பிட்டங்கள் தொடர் புடைய.