பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

natraemia

718

Navidrex-k


கட்டுப்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் வாயிலாக மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

matraemia : குருதிச்சோடியம் : சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தத்தில் சோடியம் கலந்திருத்தல்.

natriuresis : சிறுநீர்ச் சோடியக் குறைபாடு : சிறுநீரிலிருந்து சோடியம் அதிக அளவில் நீங்கி விடுதல்.

natriurtetic : சோடியம் நீக்கி : சிறுநீரிலிருந்து சோடியத்தை அதிக அளவில் வெளியேற்றும் இயல்பூக்கி.

Natulan : நாட்டுலான் : புரோகார் போசைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

natural : இயற்கையான; இயல்பான.

natur-cure : இயற்கை மருத்துவ முறை.

naturopath : இயற்கை மருத்துவர் : இயற்கை முறையில் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவர். இவர் நோய்களைக் குணப்படுத்த சீருணவு, காற்று, சூரிய ஒளி, நீர் போன்ற இயற்கை முறைகளைப் பயன்படுத்துகிறார்.

naturopathy (nature-cure) : இயற்கை மருத்துவம்; இயல்பு மருத்துவம் :இயற்கையின் போக்கிலேயே குணமாகும்படி நடத்தப்படும் மருத்துவமுறை. வேதியியல் உரங்கள் இல்லாமல் பயிராகும் உணவுப் பொருள்கள். மூலிகைகளிலிருந்து தயாராகும் மருந்துகள் ஆகியவை இந்த முறையின் அடிப்படை இது இயல்பான உடல் இயக்கத்தின்படி நோயைக் குணப்படுத்த உதவுகிறது எனக் கூறுவர்.

Naughton test : நாட்டன் சோதனை : முயற்சி, தாங்கும் சக்தி ஆகிய வற்றைக் கணித்தறிவதற்கு நெஞ்சுப்பை இயக்கத்துக்கான மிதி செக்குருளைச் சோதனை.

nausea : குமட்டல் : வாந்தி எடுப்பதற்கு முன்பு வரும் குமட்டல் உணர்வு.

nauseant : குமட்டல் பொருள்; குமட்டவல்ல; வாந்தினி : குமட்டல் உண்டாக்கும் ஒரு பொருள்.

navel : கொப்பூழ்; கொப்பூழ்சார் : அடிவயிற்றிலுள்ள ஒரு சிறிய மையப்புள்ளி.

navicuiar : படகு உறு.

navicularbone : படகு உறு எலும்பு; படகெலும்பு.

navel string : கொப்பூழ்க்கொடி.

Navidrex-k : நாவிட்ரெக்-k : சைக்ளோ பெந்தியாசைடும், பொட்டாசியமும் கலந்த ஒரு கலவையின் வணிகப் பெயர்.