பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

near death experience

719

necrobiosis


near death experience : மரண வாயில் அனுபவம் : நோய்க்குறி வெளிப்பாட்டில் மரணத்தை நெருங்கிய அல்லது மரண மடைந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட பின்னர் குணமடைந்த தனிமனிதர்களின் அனுபவம்.

near drowning : மாள்வுநிலை : பொதுவாக மரணம் விளைவிக்கும் சூழ்நிலைகளுக்கு ஆட்பட்டு ஒருவர் உயிர்பிழைத்த நிலை.

nearsighted : கிட்டப்பார்வை : கண்களுக்கு மிக அண்மையிலுள்ள பொருள்களை மிகத் தெளிவாக் பார்க்கும் திறன்.

nearthrosis : இயல்புகடந்த மூட்டிணைப்பு : முட்டை முற்றிலுமாக மாற்றியமைத்தபின் அமையும் ஒரு புதிய முட்டு. இணைப்பு இல்லாத முறி வுக்குப் பிறகு உண்டாக இயல்பு மீறிய மூட்டு இணைப்பு.

Nebcin : நெப்சின் : டோப்ராமைசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

nebula : விழி மறு; புரை; ஒளி புகுப்படல மறைப்பு; படலத்திரை : விழி வெண்கோளத்தில் படர்ந்து பார்வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி.

nebulization : துகள்படலமாக்கம் : திரவத்திலிருந்து ஒரு திவலை அல்லது மூடுபனி போன்ற துகள்கள் உண்டாதல்.

nebulizer : தெளிப்பான் மாற்று கருவி; தெளிகருவி : ஒரு திர வத்தை நுண்தெளிப்பானாக மாற்றுகிற ஒரு கருவி. இதில் தோல், மூக்கு அல்லது தொண்டையில் தெளிப்பதற்கான மருந்து அடங்கியிருக்கும்.

Necator : புத்தகப்பூச்சி : புத்தகப் பூச்சியில் ஒரு வகை.

necatoriasis : கொக்கிப்புழு நோய் : புத்தகப்பூச்சியினால் உண்டாகும் கொக்கிப்புழு நோய்.

neck : கழுத்து : தலைக்கும் தோள்களுக்கு மிடையிலான இடுக்கு வழி. பல்லின் தலையுச்சிக்கும் வேர்ப்பகுதிக்கு மிடையிலுள்ள பகுதி.

neck face syndrome : கழுத்து முக நோய் : குளோர்புரோதமாசின் சிகிச்சை தொடங்கியதைத் தொடர்ந்து, வாய்-தொண்டை இசிவு, தொடுவுணர்வு இன்மை, இதய விரைவுத்துடிப்பு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவை தோன்றும் இடைமாற்ற நோய்க் குறிகள்.

necrobiosis : திசுநசிவு : உயிரணுக்கள் அல்லது திசுக்கள் படிப் படியாக நசிவடைதல்.