பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-nema

722

neologism


-nema : -நேமா : இனக்கிற்றுகளின் வளர்ச்சியில் இழைமம் போன்ற நிலை தொடர்புடைய பின்னொட்டுச் சொல்.

nematodes : நீளுருளைப் புழுக்கள்; உருளைப் புழு; நூற்புழு; வட்டப்புழு : நீண்டு உருண்ட வடிவமுடைய புழுக்கள். இதன் இரு பாலினங்களும் குடற் குழாயில் காணப்படுகின்றன. இவற்றில் பலவகைகள் மனிதனுக்கு ஒட்டு உண்ணிகளாக உள்ளன. இவை இரு தொகுதிகளாகப் பகுக்கப் பட்டுள்ளன: 1. குடலில் மட்டுமே வாழும் புழுக்கள், கொக்கிப் புழுக்கள், சாட்டைப் புழுக்கள் இந்த வகையின. 2. பெரும்பாலும் திசு ஒட்டுண்ணிகளாக உள்ளன. (எ.டு) நரம்புச் சிலந்திப் புழுக்கள், யானைக் கால் நோய்ப் புழுக்கள்.

nemathelminthiasis : நீளுருளைப் புழுத் திரட்சி : நீளுருளைப் புழுக்கள் திரண்டிருத்தல்.

nematocide : நூற்புழுக் கொல்லி : நூற் புழுக்கள் எனப்படும் வட் டப்புழுக்களைக் கொல்லும் மருந்து.

nematode : வட்டப்புழு.

nematology : நூற்புழுவியல் : நூற்புழுக்கள் பற்றி ஆய்வு செய்யும் ஒட்டுண்ணியியலின் ஒரு பகுதி.

nembutal : நெம்புட்டால் : பென்டாபர்பிட்டோன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

neo : புதிய.

neocerebellum : சிறுமூளை : சிறுமூளைக் கோளத்தின் பெரிய இடைமட்டப் பகுதி.

neocortex : சிறுமூளை மேலுறை : காதெலும்பு தவிர, மிக அண் மையில் உருவாகியுள்ள சிறு மூளை மேலுறை.

NeoCytamen : நியோசைட்டாமென் : ஹைட்ராக்சோ கோபாலமைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

neodymium : நியோடிமியம் (Nd) : பூமியில் கிடைத்தும் அரிதான தனிமங்களில் ஒன்று. அணுஎடை 144.

neogenesis : திக மறு உயிர்ப்பு : திக மறு உயிர்ப்புப் பெறுதல்.

neolalism : பொருளற்ற சொல் புனைவு : பொருளற்ற புதிய சொற்கள் புனைதல்.

neolithic : புதிய கற்காலம் : பண்பட்ட கருவிகள் பயன்படுத்தப் பட்ட கற்காலப் பிற்பகுதி சார்ந்த.

neologism (neology) : புதுச்சொற் புனைவு :சிந்தனைக் கோளாறைக் குறிக்கப் புதிதாகச் சொற்களை புனைந்து கூறுதல்.