பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nephrolithiasis

725

nephrorrhapy


nephrolithiasis : சிறுநீரகக் கல் நோய் : சிறுநீரகத்தில் கற்கள் இருத்தல்.

nephrolithotomy : சிறுநீரகக் கல் நீக்கம்; சிறுநீரகக்கல் எடுப்பு : சிறு நீரகத்திலுள்ள கற்களை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

nephrology : சிறுநீரகவியல் : சிறுநீரகத்தைப் பற்றியும் அதில் உண்டாகும் நோய்கள் பற்றியும் சிறப்பாக ஆராய்தல்.

nephroma : சிறுநீரகக்கட்டி : சிறு நீரகத் திசுவில் உண்டாகும் ஒரு வகைக் கட்டி.

nephromegaly : சிறுநீரக மிகைவளர்ச்சி : சிறுநீரகத்தின் ஒன்றில் அல்லது இரண்டிலும் ஏற்படும் மிகை வளர்ச்சி.

nephron : சிறுநீரக வடிப்பி; சிறு நீரகக் கூறு : சிறுநீரகத்தின் ஓர் அலகு. இதன் எண்ணிக்கையைப் பொறுத்து, சிறுநீரகத்தின் அளவு அமையும். மனிதரின் சிறுநீரகத்தில் 10 இலட்சம் நெஃப்ரான்கள் காணப் படும். இது உடலின் நீர்க் கொள்ளளவைக் கட்டுப்படுத்துகிறது; சோடியம், பொட்டாசியம் போன்ற மின் பகு பொருள்களையும் கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் அமில, காரச் சமநிலையைப் பேணுகிறது. குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், பாஸ்ஃபேட், பைகார்பனேட், புரதங்கள் ஆகியவற்றின் சரியான அளவைப் பேணுகிறது. யூரியா, யூரிக் அமிலம், கிரியாடினின் சல்ஃபேட் போன்ற கழிவுப் பொருள்களை அகற்றுகிறது. இயல்பான இரத்த உற்பத்திக்குத் தேவையான எரித்ரோப்பாய்டின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது.

nephropathy : சிறுநீரக நோய் : குருதிநாள விரிவகற்சியினால் உண்டாகும் சிறுநீரக நோய்.

nephropexy : சிறுநீரகம் பொருத்துதல்; சிறுநீரகப் பொருத்தம் : மிதக்கும் சிறு நீரகத்தை அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல்.

nephroplasty : சிறுநீரக ஒட்டுறுப்பு மருத்துவம்; சிறுநீரக அமைப்பு : சிறுநீரகத்தில் ஒட்டு உறுப்பு அறுவை மருத்துவம் செய்தல்.

nephroptosis : சிறுநீரக பெயர்ச்சி; சிறுநீரகச் சரிவு : சிறு நீரகம் இறங்கி இடம் பெயர்ந்திருத்தல். சில சமயம் மிதக்கும் சிறுநீரகத்தையும் இது குறிக்கும்.

nephropyosis : சிறுநீரகச்சீழ்; சிறுநீரகச் சீழ்மை : சிறுநீரகத்தில் சீழ் பிடித்தல்.

nephrorrhapy : சிறுநீரகப் பொருத்து மருத்துவம் : மிதவைச் சிறுநீரகத்தை அதன் இடத்தில் பொருத்துவதற்கான அறுவை மருத்துவம்.