பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/727

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nephrosclerosis

726

nerve


nephrosclerosis : சிறுநீரகத் தமனித் தடிப்பு : வடுப்பட்ட சுருங்கிய சிறுநீரகம் தமனித் தடிப்புச் சிறுநீரகங்களில் பொதுவாக இது காணப்படுகிறது.

nephroscope : சிறுநீரக ஆய்வுக் கருவி; சிறுநீரக நோக்கி : சிறு நீர்த்திசுக்களை நோக்குவதற்கான உள்ளுறுப்பு நோக்குக் கருவி. சிறுநீர் தொடர்ந்து கழிவதற்கும், அதனுடன் சேர்ந்து வரும் சேதாரப் பொருள்கள் வெளியேறுவதற்கும் இதில் வசதி செய்யப்பட்டுள்ளது.

nephrosis : சிறுநீரக நசிவு; சிறு நீரகக் கேடு : சிறுநீரகத்தில் வீக்கம் எற்படாமல் நசிவு ஏற்படுதல்.

nephrotic syndrome : சிறுநீரக நோய்; சிறுநீரக நோய்க்குறி தொகுப்பு; சிறுநீரகிய இணைப் போக்கு : இரத்த நிணநீர் முட்டை வெண்கரு குறைவதால் உண்டாகும் நோய். இதனால் சிறுநீரகங்களில் குறைந்த அளவு திசுவியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சிறுநீரக முடிச்சு நோய்களிலும் இது ஏற்படக் கூடும். இதனால் நீரிழிவு நோய் சிக்கலாகக் கூடும்.

nephrostomy : சிறுநீர் வடிகுழாய்; நீரகத் துளையீடு : சிறுநீர்க் குழாயைத் தவிர்த்து, அடி வயிற்று மேற் பரப்புக்குச் சிறுநீரை வெளியேற்றுவதற்காகச் சிறுநீரகத்தில் ஒரு சிறிய குழாயைச் செலுத்துதல், அறுவை மருத்துவத்துக்குப் பிறகு சிறுநீர்க் குழாய் குணமடைவதற்காக இது கையாளப்படுகிறது.

nephrotomy : சிறுநீரகக் கீறல்; சிறுநீரக வெட்டு; சிறுநீரகத் துளையீடு : சிறுநீரகப் பொருளில் கீறலிடுதல்.

nephtotoxic : சிறுநீரக நச்சு : சிறுநீரக உயிரணுக்கள் செயற்படுவதைத் தடுக்கிற அல்லது அந்த உயிரணுக்களை அழிக்கிற நச்சுப்பொருள்.

nephrotoxin : சிறுநீரக நச்சுப் பொருள் : சிறுநீரகங்களுக்கான குறிப்பிட்ட அழிவுக் குணங்கள் உடைய ஒரு நச்சுப்பொருள்.

nephroureterolithiasis : சிறுநீரகக் கல்லடைப்பு : சிறுநீரகங்களிலும் சிறுநீர்க் குழாய்களிலும் கல்லடைப்புகள் இருத்தல்.

nephro ureterectomy : சிறுநீரக நாள அறுவை மருத்துவம்; சிறுநீரக நீர்க்குழல் எடுப்பு : சிறுநீரகத்துடன் சிறுநீர்க் கசிவு நாளத்தின் ஒரு பகுதியை அல்லது முழுவதையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்,

nerve : நரம்பு : வெளிநரம்புக்கும் நரம்பு மையத்திற்கும் இடையில் துடிப்புகளை அனுப்புவதற்கு உதவும் இழைகளின் நீண்ட தொகுதி.