பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

network

728

neuroblast


network : வலையமைவு; பிணைப்பு.

Neufeld naii : நியூஃபெல்ட் ஆணி : V-வடிவுடைய துனியுடைய ஒர் அங்கக்கோணல் ஆணி. பெருங்கால் எலும்புகளிடையே ஏற்படும் முறிவை பொருத்துவதற்கு இதுபயன்படுத்தப் படுகிறது. அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் அலோன்சோ நியூஃபெல்ட் பெயரால் அழைக்கப் படுகிறது.

Neulactil : நியூலாக்டில் : பெரிசையசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

neural : நரம்பு சார்ந்த; நரம்பிய : நரம்பு மண்டலம் சார்ந்த.

neuralgia : நரம்புவலி; நரம்புக் குத்துவலி : நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வலி, நரம்பு உழைச்சல்.

neuralgic : தலைவலி சார்ந்த.

neurapraxia : வெளிநரம்புச் செயலிழப்பு; நரம்புச் செயல் தேக்கம் : வெளி நரம்பு இழைமங்களில் தற்காலிகமாக ஏற்படும் செயலின்மை. இது நசுங்குதல் அல்லது நீண்ட கால அழுத்தம் காரணமாக உண்டாகிறது.

neurasthenia : நரம்புத் தளர்சி நோய் : களைப்பு, சோம்பல், முயற்சியின்மை, படப்படப்பு, அதிக கூருணர்வு, காரணமின்றி எரிச்சல், அடிக்கடி உடல்தளர்ச்சி ஆகியவை உண்டாகும். அரிதாக ஏற்படக் கூடிய ஒரு நோய்.

neurasthemic : நரம்புத் தளர்சி சார்ந்த.

neuraxis : மூளை-முதுகுத்தண்டு அச்சு : முளைத்தண்டும், முதுகுத் தண்டும் இணைந்திருத்தல். மூளை-முதுகுத்தண்டு அச்சு.

neurectoderm : நரம்பியல் திசு : நரம்புக் குழாய், நரம்புக் கொண்டை ஆகியவற்றிலிருந்து பெறப்படும் திசுக்கள்.

neurectomy : நரம்பு அறுவை மருத்துவம்; நரம்பெடுப்பு : நரம்பின் ஒரு பகுதியை வெட்டி யெடுத்தல், நரம்பைத் துணித்தல்.

neurilemma : நரம்பிழையுறைச் சவ்வு; நரம்பிழைத் தகடு : முது கந்தண்டு நாளத்தைச் சுற்றியுள்ள ஒரு நரம்பு இழைமத்தை முடியுள்ள மெல்லிய புறச்சவ்வு.

neurilemmoma : நரம்பு உயிரணுக் கட்டி : கிட்டமைப்பில் ஷ்வான் உயிரணுக்களுக்கு ஒப்பான உயிரணுக்களிலிருந்து உண்டாகும் பொதியுறையுள்ள உக்கிரமற்ற கட்டி.

neurine : நரம்பிழைமம் சார்ந்த.

neuritis : நரம்பழற்சி : நரம்பின் வீக்கம்.

neuroblast : நரம்பணு; நரம்பு மூலவணு : நரம்பு உயிரணு.