பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adenosarcoma

72

adenovirsis


adenosarcoma : சுரப்பு இணைப்புத் திசுப்புற்று : சுரப்பித் திசுக்களிலும் கரப்பு இணைப்புத் திசுக்களிலும் உருவாகின்ற புற்று வகை.

adenosinase : அடினோசின் சிதைப்பி.

adenosclerosis : சுரப்பி கெட்டியாகல் கோளத் தடிமன் : ஒரு கரப்பி, வீக்கத்துடன் அல்லது வீக்கமின்றி, கெட்டியாகி விடுதல். இழைமத் திசுவின் பதிலீடு அல்லது சுண்ணக மயமாக்குதல் காரணமாக ஒரு சுரப்பு கடினமா கிறது.

adenosine diphosphate (ADP) : அடினோசின் டைஃபாஸ்ஃபேட் : உயிரணுவிற்குள் நடைபெறும் எரியாற்றல் பரிமாற்றத்தில் உள்ளடங்கிய உயிர்மங்களாலான ஒரு முக்கியமாக வளர்சிதை மாற்றப் பொருள். இந்தப் பொருளின் மூலமாக உயிரணுவில் வேதியியல் எரியாற்றல் பாதுகாத்து வைக்கப்படுகிறது.

adenosinase : அடினோசின் சிதைப்பி.

adenosine triphosphate (ATP) : அடினோசின் முப் பாஸ்ஃபேட், அடினோசின் டிரைஃபாஸ் ஃபேட் (ATP) : நடுத்தரமான மிகு எரியாற்றல் கூட்டுப்பொருள். இது அடினோசின் டைஃபாஸ் ஃபேட்டினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்யும்போது பயனுள்ள வேதியியல் எரியாற்றலை வெளியிடு கிறது. உயிர்ப் பொருள் கட்டமைப்பின் போது இந்தப் பொருள் உண்டாகிறது.

adenosis : சுரப்பி நோய்.

adenotome : மூக்கடித்தசை வெட்டி : சுரப்பியை அகற்ற உதவும் (வெட்டியெடுக்க உதவும்) ஒரு மருத்துவக் கருவி. குறிப்பாக முக்கடித் தசையை வெட்டியெடுக்க இக்கருவி பயன்படுகிறது.

adenotonsillectomy : மூக்கடியான் - அடிநாத்தசை அறுவை மருத்துவம் : முக்கடித்தசை வளர்ச்சி (முக்கடியான்) அடி நார்த்தசை மூலம் அகற்றுதல்.

adenoviridae : அடினோவிரிடியே : அடினோ வைரஸ்ஸின் குடும்பம். இரட்டைச் சரம் டி.என்.ஏ. உள்ள வைரஸ்களைக் கொண்ட ஒரு வைரஸ் குடும்பம். நோய்த் தொற்று அணுக்களில் உள்ள உட்கருக்களில் இவை வளர்ச்சியடையும் தன்மை உடையவை. சுவாசப் பாதையையும் விழி வெண் படலத்தையும் பாதிக்கக் கூடிய வைரஸ் குடும்பம்.