பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neurinoma

729

neurocutaneous ..


neurinoma : நரம்பு உறைக்கட்டி : நரம்பின் பொதியுறையில் உண் டாகும் கட்டி.

neurectomy : நரம்பு அறுவை.

neurities : நரம்பு அழற்சி.

neurities, alcoholic : மதுவிய நரம்பழற்சி.

neurities, diobatic : நீரிழிவு நரம்பழற்சி.

neuro- : நரம்பு : நரம்பு அல்லது நரம்பு தொடர்பானவற்றைக் குறிக்கும் கூட்டுச் சொல்.

neuroablation : நரம்பு திசு அழிவு : நரம்புத்திசு அழிபடுதல்.

neuroanatomy : நரம்புமண்டல உட்கூறியல் : நரம்புமண்டலத்தின் உட்கூறியல்.

neuroanaesthesia : நரம்பு உணர்வு நீக்கம் : நரம்பியல் அறுவைச் சிகிச்சைக்கான உணர்வு நீக்கம்.

neuroarthropathy : நரம்பு மூட்டு நோய் : மைய நரம்பு மண்டல நோயுடன் இணைந்த மூட்டு நோய்.

neurobiology : நரம்புமண்டல உயிரியல் : நரம்புமண்டலம் பற்றிய உயிரியல்.

neuroblastoma : நரம்பணுக் கட்டி : நரம்பணுக்களில் உண்டாகும் உக்கிரமான கட்டி. இது பொதுவாக அண்ணீரகச்சுரப்பி மச்சையில் உண்டா கிறது. இது பரிவு நரம்பு மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் உண்டாகலாம்.

neurocanal : முதுகுத்தண்டு மையப் புழை : முதுகுத்தண்டு வடத்தின் மையப்புழை.

neurocheck : நரம்பியல் சோதனை : நரம்பு பற்றிய சுருக்கமான கணித்தாய்வு.

neurocirculatory : நரம்பு சுற்றோட்டம் சார்ந்த : சுற்றோட்டம் மற்றும் நரம்பு மண்டலம் தொடர்புடைய.

neurocoele : நரம்பு மண்டல உட்குழிகள் : மைய நரம்பு மண்ட லத்திலுள்ள உட்குழிகள். இதில் மூளையின் குழிவுக் கண்ணறைகள், முதுகுத் தண்டின் மைய உட்புழை ஆகியவை உள்ளடங்கும். இவை நரம்புக் குழாயிலிருந்து தோன்றுகின்றன.

neurocranium : மண்டையோட்டுப் பகுதி : மூளையை முடி உள்ள மண்டையோட்டின் பகுதி.

neurocrine : நியூரோக்கிரைன் : ஒரு வேதியியல் இடமாற்றுப் பொருள். நரம்புகளைப் பாதிக்கும் நாளமில் உட்சுரப்பு நீர்.

neurocutaneous syndromes : நரம்பு-தோல் நோய்கள் : மூளை, தோல், கண் மற்றும் பிற மண்டலங்களைப் பாதிக்கும் நோய்.