பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neurocrine

731

neurology


காற்று வழிகளில் காணப்படும் நரம்பு வலுவூட்டுக் கட்டமைப்புகள்.

neurocrine : நியூரோக்ரைன் : நரம்பு மூலம் கடத்தும் செயல் கொண்ட நியூரோக்கிரைன் விளைவுடைய பொருள்.

neuroepithelium : நரம்பு மேல் திசு : புறத்துண்டுதல்களை ஏற்கும் புறத்தோல் உயிரணுக்கள்.

neurofibril : நரம்பு இழைமம் : நரம்பு உயிரணுவிலுள்ள இழைமக் கட்டமைப்பு.

neurofibromatosis : தோலடி வீக்கம் : நரம்புகளிலிருந்து மெதுவாக விளரும் மென்மையான பன்முகத் தோலடி வீக்கம்.

neurofibroma : நரம்பு நார்க் கழலை; நரம்பு நார்ப் புத்து : நரம் புகளின் இணைப்புத் திசுக்களில் ஏற்படும் கட்டி.

neurogenesis : நரம்புத்திசு உறுவாக்கம் : நரம்புத்திசு உருப்பெறுதல்.

neurogenic : நரம்புத்திசுவாக்கம் : நரம்புத் திசுவினுள் தோன்றுகிற அல்லது நரம்புத்திசு உருவாக்குகிறது.

neuroglia : மூளை ஆதாரத் திசு : மூளையையும் நரம்பு நாளத்தை யும் தாங்குகிற திசுக்கள்.

neurography : நரம்பியக்க ஆய்வியல் : நரம்புகளின் இயக்காற்றலை ஆராய்ந்தறிதல்.

neurogylycopenia : நரம்பணுச் சர்க்கரைக் குறைவு; நரம்பியச் சர்க்கரை இறக்கம் : நரம்பணுக்களில் குளுக்கோஸ் (சர்க்கரை) குறைவாக இருத்தல். இது மூளை தவறாகச் செயற்பட உடனடியாகக் காரணமாகிறது.

neurohypophysis : நரம்பு தொங்கு மடல் : கபச்சுரப்பியின் பிற்பகுதி யிலுள்ள தொங்குமடல்.

neurohormone : நரம்பு இயங்கு நீர் : நரம்புச் சுரப்பி உயிரணுவினால் அமைந்த ஒரு வேதியியல் முன்னோடிப் பொருள். அசிட்டில்கோலின், டோப்பாமைன், எப்பிநெஃபிரின், மார்பின் நெஃபிரின், செரோட்டினின் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு.

neuroleptics : நரம்பு மண்டல மருந்துகள் : நரம்பு மண்டலத்தில் செயற்படும் மருந்துகள். இதில் முக்கியமான உளவியல் சமணமூட்டும் மருந்துகள் இதில் அடங்கும்.

neurologist : நரம்பியல் மருத்துவர்; நரம்பியலார்; நரம்பியல் வல்லுநர் : நரம்பியல் மருத்துவ வல்லுநர்.

neurology : நரம்பியல் : நரம்பு மருத்துவ இயல். நரம்பின், கட் டமைப்பு, செயல்முறை, நரம்பு நோய்கள், அந்நோய்களுக்கான மருத்துவம் பற்றி ஆராயும் துறை.